சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட 5000 வெசாக் கூடுகள் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வில் வீதிகளை அலங்கரித்து ஆமிச பூஜையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
இத் தேசிய வெசாக் நிகழ்வு நடாத்துவதுடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உட்பட அனைவரையும் தெளிவு படுத்தும் நிகழ்வு நேற்று (23) நுவரெலியா மாவட்ட சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
"பஜேத மித்தே கல்யாணே" - "கலன மிது -ரன் அசுரு கரண்ண" எனும் தொனிப்பொருளில் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஒரு வார காலம் முழுவதும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.