"வளமான நாடு அழகான வாழ்க்கை" எனும் கோட்பாட்டின் கீழ் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவின் பத்தேகம, பரகஹ எல்ல எல்ல - கந்த அராவ வீதி அபிவிருத்திப் பணிகள், போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஊவா மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக 5.2 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நான்கு மாதங்களினுள் முடிவுறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


