கோப்பி உற்பத்தியை நாட்டில் ஸ்தாபித்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தேசிய கோப்பி மாநாடு கண்டியில் நேற்று (08) நடைபெற்றது.
ஏற்றுமதி விவசாய திணைக்களம், இலங்கை கோப்பி சங்கம் மற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் பங்களிப்புடன் இம்மாநாடு நடைபெற்றது.
நாட்டில் 5000 ஹெக்டயர் நிலப் பரப்பில் கோப்பி செய்கை பண்ணப்படுவதுடன் வருடாந்தம் 3300 மெற்றிக் தொன் அறுவடை இதன் மூலம் கிடைக்கப் பெறுவதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்தார்.
400 மெற்றிக் தொன் வரை அறுவடை ஏற்றுமதி செய்யப்படும் போது 1508 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு அந்நிய செலாவணி கிடைக்கப் பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


