சமூக சக்தி செயற்றிட்டத்திற்காக நாடளாவிய ரீதியாக 25000.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சமூக சக்தி செயற்றிட்டத்திற்காக நாடளாவிய ரீதியாக 25000.00 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • :

"சமூக சக்தி" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நேற்று (2026.06.02) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் அரியாலை கிராமத்தில் அங்குரார்ப்பண செய்யப்பட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து மக்களின் வேண்டுகோளிற்கு இனங்க, மக்களால் தெரிவு செய்யப்படும் செயற்றிட்டமே "சமூக சக்தி" செயற்றிட்டமாகும் எனவும், இதன் மூலம் கிராமங்கள் தன்னிறைவு அடையும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசாங்க உத்தியோகத்தர்களும், மக்களும் இணைந்து இச் செயற்றிட்டங்களை தெரிவு செய்யப்படுவதால், அபிவிருத்தியானது கீழ் மட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு மேல் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் பயனுறுதி வாய்ந்த திட்டமாக இது அமையும் எனவும், பொதுமக்கள் இச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அந்த வகையில் மதிப்பன் குளத்தின் வயலினை 05.00 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், சிறு தானியங்கள் உற்பத்தி செய்வதற்காக வயலை சுற்றி வேலி அமைத்தல் கருத்திட்டத்திற்கான செயற்றிட்டம் பயனுள்ளதாக அமையும் எனவும், தனிநபர் அல்லது கிராமம் தன்னிறவு அடைய வேண்டும் எனவும், விவசாய உணவுப் பொருட்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தன்னிறைவு அடைய வேண்டும் எனவும், சிறுதானிய உற்பத்தி நஞ்சில்லாத உணவு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், டித்வா புயல் தாக்கத்தினால் நாடு பாதிக்கப்பட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்றுமில்லாத வகையில் சனாதிபதி 25000.00 ரூபா உதவிகளை வழங்கியதாகவும், எமது அரசாங்கம் பொறுப்பேற்ற போது இருந்த நிதி நிலைமைகளை கருத்தில் கொண்டு, சிக்கனம், வீண் விரையங்கள் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகளை கட்டுப்படுத்தி வருவதாகவும், ஆனால் மக்களின் செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்படுத்திவருவதாகவும், அந்த வகையில் சமூக சக்தி செயற்றிட்டத்திற்காக நாடளாவிய ரீதியாக இத் திட்டத்திற்கு அதிமேதகு சனாதிபதி 25000.00 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சிந்தனையான சமுதாயம் உருவாக வேண்டும் எனவும் கிராமிய வறுமை ஒழிய வேண்டும் இதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், போதையற்ற நாடாக உருவாகவும் கிராமிய ஜனநாயக உரிமை பேணவும் அறிவுசார்ந்த ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் எனவும், கிராமிய வறுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related Articles