மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நூலகத்தினை பார்வையிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் வருகை மேற்கொண்டனர்.
மாவட்டத்திற்கே உரித்தான பல அரிய வகை நூல்கள் மற்றும் அரிச்சுவடிகள் மக்கள் பார்வைக்கு விருந்தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பல்லாயிரக்கணக்கான நூல்கள், நவீன தொழில் நுட்பத்துடன் இணைய வசதியுடன் கூடிய காட்சி திரை, செயற்கை நுண்ணறிவுடன் செயற்படும் இயந்திர மனிதன், புது கவிதை புனைதல் போன்ற பல சுவாரசியமான விடையங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பிரதேசத்தில் அறிவை வளர்க்கும் முக்கியமான இடமாக மட்டு நூலகம் விளங்குகின்றது. புத்தகங்கள் மனிதனுக்கு நல்ல நண்பர்களாக இருந்து வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டுகின்றன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் நூலகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. தினமும் நூலகம் சென்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் மனிதனை ஒழுக்கமுள்ளவராகவும் அறிவாளியாகவும் மாற்றுகிறது. ‘ஒரு புத்தகம் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தும்’ என்பதால், அனைவரும் நூலக பயன்பாட்டை அதிகரித்து வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


