திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்

திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் தொடர்பான கள விஜயம்
  • :

கௌரவ ஜனாதிபதி அவர்களின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கிண்ணியாவில் அமைக்கப்பட்டுள்ள திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில் மாவட்ட அரசாங்கஅதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (29) கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் பார்வையிடப்பட்டதுடன், நிலையத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான மீதமுள்ள பணிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்கள், பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் மீதமுள்ள பணிகள் மற்றும் நிலைய திறப்பு விழாவின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர், மாவட்ட பொறியியலாளர், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை தலைவர் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles