All Stories

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

பதுளை மாவட்டத்தின் ஹாலி எலவிற்கு 6,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கல் திட்டம்

பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்னவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

பதுளை மாவட்டத்தின் ஹாலி எலவிற்கு 6,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கல் திட்டம்

2025 வரவுசெலவுத்திட்டம் இன்று மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) இன்று (17ஆம் திகதி) மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2025 வரவுசெலவுத்திட்டம் இன்று மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை நேற்றையதினம் (16.02.2025) பார்வையிட்டனர்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை