இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், நவீன ஆழமற்ற நீர் ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் Shallow Water Multi-Beam Echo Sounder இயந்திரத்தை இலங்கை கடற்படை நீர்வரைவியல் சேவைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வானது, நேற்று முன்தினம் (2025 பெப்ரவரி 18) கொழும்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவன வளாகத்தில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ. Paul Stephens மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் தலைமையில் நடைப்பெற்றது.



