இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்தின் (Maritime Facilitation Centre - MFC) கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுப் பயணத்தில், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, நிர்வாக பணிப்பாளர் கனக ஹேமச்சந்திர மற்றும் அதிகார சபையின் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.


