தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களின் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க கவனம் செலுத்தப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் ஆரம்பிக்டகப்பட்டுள்ளதுடன், அதன் இறுதித் திகதி 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்று, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.


