சிகிரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுலா பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOICA) விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன் வைத்துள்ளது.

சிகிரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுலா பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOICA) விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன் வைத்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் அடங்கிய ஒரு தொகுதி நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.
கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில்; தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.
அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரி அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், குறிக்கோள்களைத் தயாரிக்கும், அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
கௌரவமான இலங்கை அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், நோக்கு, குறிக்கோள்கள் என்பவற்றுக்கு வழிகாட்டும், அறிவார்ந்த வளத்தை உருவாக்குகின்ற, அரசியல்வாதிகளுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்குகின்ற நிறுவனமாக இலங்கை மன்றக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்காக மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டு, கல்லூரியின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கீழ் தற்போது செயற்படும் இலங்கை மன்றக் கல்லூரி இன்று இலங்கையின் முன்னணி வயது வந்தோர் கல்வி மற்றும் பயிற்சி மத்திய நிலையமாக செயற்படுகின்றது.
இந்நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்ட அமைச்சர், இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் நிறுவனத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, கேட்டறிந்து கொண்டார்.
ஆராய்ச்சி, அறிவுசார் கலந்துரையாடல்களை கல்லூரி தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை மன்றக் கல்லூரியில் பணியாற்றும் சகல உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தின் போக்குகளுக்கு வழிகாட்டி, தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதான முக்கியமான பிரஜைகள் மற்றும் அதிகாரிகளாக உருவாக வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் எதிர்கால குறிக்கோள்களை அடையாளம் கண்டு செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், அதற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய இலங்கை அரசைக் கட்டியெழுப்பும் அடிப்படையைத் தயாரிக்கும் பொறுப்பு புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொறுப்பை மிகத் துல்லியமாகவும், பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தமது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேரமும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அவ்வாறு முழுநேர அர்ப்பணிப்பில் தற்போது புதிய அமைச்சரவைக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர்கள் சந்தித்துக் கொள்ள முடியாது. தொலைபேசிக்கும் வருவதில்லை ஊடக அறிக்கைகளையும் வெளியிடுவதில்லை. நேர்முகக் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருப்பதாக நினைவுபடுத்தினார்.
என்ன குற்றங்கள் முன்வைக்கப்பட்டாலும் அமைச்சரவை அயராது முழு நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்து, இலங்கை அரசுக்கு சிறந்த அத்திவாரத்தை உருவாக்குகின்ற பணியை எவ்வித குறைபாடுகளும் இன்றி மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தான் பொறுப்புடன் சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்த விதத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படாது, சரியான ஆராய்ச்சிகள் இன்றிய தரவு, தகவல்களின் அடிப்படையில் அன்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக இருத்தல் அல்லது அதிகாரத்தில் தான் தோன்றித்தனமாக தீர்மானங்களை செயற்படுத்தியமையினால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அந்த நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரி எவ்வளவு திட்டங்களை தயாரித்து உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள், கல்வி என வழங்கினாலும், அந்த செயற்பாட்டிற்காக பாரிய நிதி செலவிடப்பட்டாலும், பாரம்பரியத்திலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்குள் செயற்படுவதற்கும் சுயாதீனமாக சரியானதை மேற்கொள்வதற்கு ஏற்ற பலமான கொள்கையுடையவர்களாக இல்லாமைக்கு நாட்டின் அரச அதிகாரிகள் கூட பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே நாடொன்றிற்கு முன்னேறி செல்வதற்கு முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படும் அரசாங்கம், அமைச்சர்கள் தமக்கு நினைத்த விதமாக செயல்படுவதற்கு வாய்ப்பளிக்காது திட்டமொன்றைப் பின்பற்றி, முன்னோக்கிச் செல்வதற்கு வழிகாட்டலை வழங்கும் பொறுப்புடன், அதற்கான குறிக்கோள்களை தயாரிப்பதற்குப் பொருத்தமான நிறுவனம் இலங்கை மன்றக் கல்லூரியே என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் எஸ். எம். சமன் சமரக்கோன், பணிப்பாளர் நாயகம் ரித்மா குணசேகர மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.12.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில், வெளிநாட்டில் தொழில்புரிபவர்களால் நாட்டிற்கு அந்நியச் செலாவணி கிடைத்துவருவதாகவும், பதிவு செய்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கான விழிப்புணர்வுகள் அதிகம் தேவை எனவும் குறிப்பிட்டதுடன், தந்தை அல்லது தாய் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடு சென்ற நிலையில் அவர்களின் பிள்ளைகள் தமது கல்வியில் ஆர்வம் காட்டி கற்று நல்ல தேர்ச்சி பெற்றமையிட்டு பிள்ளைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், இவ் போட்டி நிறைந்த கல்விச் சூழலில் விடாமுயற்சியாக கற்று உயர்வு அடைய வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் கல்விக்கான உதவியானது ஒரு ஊக்கப்படுத்தலாகும் எனவுமகுறிப்பிட்டார்.
தரம் 05 புலமைப்பரிசில் (25,000/=) பரீட்சை, க.பொ. த (சாதாரண தரம் 30,000/=) மற்றும் க. பொ. த (உயர்தரம் பரீட்சை 35,000/=) ஆகியவற்றில் அதி உயர் சித்தியடைந்த 26 மாணவர்களுக்கான ஊக்குவிப்புக்கொடுப்பனவு மற்றும் 98 மாணவர்களுக்கான ரூபா 10,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் என்பன மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்க துணை நிற்கும்
மேலதிக தேவைப்பாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்றும் மாணவர்களுக்கு துணை நிற்கும் எனக் குறிப்பிட்டு மாணவர்களின் எதிர்கால ஒளிமயமான வாழ்க்கைக்கு தமது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மழை நிலைமை:
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் பரந்து விரிந்து காணப்படும் ஆத்துவாழை உட்பட நீர்த்தாவரங்களை அகற்றும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலகம் ஆகியவை ஒன்றிணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதுடன், அது தொடர்பான விசேட கண்காணிப்பு சுற்றுப் பயணமொன்று இன்று (28) காலை பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னஸ்ரீ தலைமையில் இடம்பெற்றது.
அதன்போது எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் இரண்டாம் திகதி ஆத்துவாழை உட்பட தாவரங்களை அகற்றும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னஸ்ரீ தெரிவித்தார்.
பராக்கிரம சமுத்திரத்தில் பரந்து காணப்படும் ஆத்துவாழை மற்றும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் ஒருங்கிணைந்த திட்டம்
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் பரந்து விரிந்து காணப்படும் ஆத்துவாழை உட்பட நீர்த்தாவரங்களை அகற்றும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலகம் ஆகியவை ஒன்றிணைந்து இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளதுடன், அது தொடர்பான விசேட கண்காணிப்பு சுற்றுப் பயணமொன்று இன்று (28) காலை பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னஸ்ரீ தலைமையில் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல்,
விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,
சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஊடக அறிக்கை - 108
*தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழிற்படையணியை கட்டியெழுப்புவதே அரசின் இலக்கு.* - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய –
அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்திற்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவையானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பதின்மூன்று பாடநெறிகளின் கீழ் டிப்ளோமாவை பூர்த்தி செய்த 761 இளைஞர் யுவதிகளுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
நாடும், தேசமும் முன்னேறுவதற்கு, சமூகமொன்று முன்னேறுவதற்கு பல்வேறு திறன்களைக் கொண்ட நபர்கள் அவசியமாகும். நாட்டின் கல்வி முறையின் ஊடாக எவரும் பின்னடைவை சந்திக்காது, முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்பதே அரசின் இலக்காகும். எமது இளையோரின் திறன்களை பூரண வேலைவாய்ப்புக்கு நேரடியாக பொருந்தக்கூடிய நபர்களாக மாற்றியமைக்கப்பட வேண்டும். அதேபோல் தொழில்முனைவோர் திறன் கொண்ட தொழிற்படையணியாக இருக்க வேண்டும். இதன்மூலம் தொழிற் சந்தைக்கும் இளையோர் சமூகத்திற்குமிடையே காணப்படும் திறன் பரஸ்பரத்தை குறைக்க முடியும். தொழிற் கல்வி, கைத்தொழில் கல்வி அல்லது தொழிற் சந்தைக்கு நேரடியாக தொடர்புபடும் பயிற்சி சந்தர்ப்பங்களை அதிகளவானோர் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பாடசாலையிலிருந்து மூன்றாம் நிலை மட்டம் வரை இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் திறன்களை பெற்றுக்கொடுப்பதற்கு எமது கொள்கை பிரகடனத்தின் ஊடாக நாம் திட்டங்களை வகுத்துள்ளோம்.
அனைத்து தொழிற்துறையும் மதிப்புக்குரியது. தாம் விரும்பும் எந்தவொரு தொழிற்துறையிலும் பிரவேசிக்கும் அனைவருக்கும் சமூகத்தில் முக்கியமான மற்றும் மதிப்புக்குரிய உறுப்பினர் என்ற உணர்வைக் கொண்டிருப்பதில் உறுதி இருக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட தொழிற்துறையில் அவர் அல்லது அவளுக்கு முன்னேற முடியுமென்ற நம்பிக்கையை உருவாக்குவதும் அவசியமானது.
எமது நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் இளையோர் பரம்பரைக்கு சிறப்பான திறன்கள் உள்ளன. அதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்க தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப கல்வியை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானது. விசேடமாக பயிற்சி மத்திய நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கொள்ளளவு அபிவிருத்தி மூலம் பயிற்சியின் தரத்தை அதிகரித்தல் மற்றும் தொழிற்துறை கல்வியில் இளைஞர்கள் பயணிக்கக்கூடிய வழிகளை உறுதிப்படுத்தல் மற்றும் உருவாக்குதல் அவசியமாகும்.
தொழிற்துறை மற்றும் கைத்தொழில் துறையில் இளைஞர் யுவதிகளுக்கு உயர் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்திற்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவையானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சி அதிகார சபையின் பதில் தலைவர் சமந்தி சேனாநாயக்க, பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் ஊடக பிரிவு
2024.12.28


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]