All Stories

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பித் திருட்டை நிறுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உதவி

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பித் திருட்டை நிறுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உதவி  - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மின் கம்பிகளை வெட்டுதல் தொடர்பாக அமைச்சுக்கு கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை (STF) சுற்றுலா ரோந்து சேவையின் அடிப்படையில் ஈடுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்கம்பிகளை வெட்டிச் செல்லும் சந்தர்ப்பங்களில் அந்த திருடர்களுக்கு தண்டனை வழங்கினாலும் எவ்வளவு புதுப்பித்தாலும் மீண்டும் மீண்டும் இந்த செயற்பாடு இடம்பெறுவதுடன், இரவு காலங்களில் இடம்பெறும் இந்த திருட்டினால் வீதியைப் பயன்படுத்துபவர்களும்  பயப்படுவதாக தெரிய வருகின்றது. 

 

இதற்கான இந்த யோசனை இரவு நேரங்களில் சுற்றுலா ரோந்து சேவையை முறையாக மேற்கொள்வது தீர்வாக அமையும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

 

அவ்வாறே இந்த வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் அவற்றை உடனடியாக  நீக்குவதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் இந்த அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இணக்கம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் மின் கம்பித் திருட்டை நிறுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உதவி

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் நேற்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நத்தார் தின செய்தி

நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம். 

நத்தார் தின செய்தி

நத்தார் தின வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான  நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை  கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம்,  வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை   உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.

நத்தார் தின வாழ்த்துச் செய்தி