All Stories

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்குமாறு கோரிக்கை - கடற்றொழில் நீரியல், கடல் வளங்கள் அமைச்சர்  

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கொரிய அரசாங்கத்திடம்   - கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை 

கொரியாவின் தொழிற்சந்தையில் இலங்கை மீனவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை அதிகரிக்குமாறு கோரிக்கை - கடற்றொழில் நீரியல், கடல் வளங்கள் அமைச்சர்   

சீனாவிடம் இருந்து இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி 

சீனத் தூதுவர் கீ ஸென்ஹொங் (Qi Zhenghong) தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் உலர் உணவுப் பொதிகளை  வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.

சீனாவிடம் இருந்து இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி 

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல்

ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல்

வானிலை முன்னறிவிப்பு

இன்றிலிருந்து (30ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, அதற்காக இணையவழி(ஒன்லைன்) முறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.

ஒன்லைன் முறையின் ஊடாக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கண்டறிந்து அது தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவித்தார்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் முறைகேடுகளில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இதனுடன் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு நிறுவன மட்டத்திலான ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு அப்பால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி அயேசா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை