All Stories

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

வெள்ளப் பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிரந்தரத் தீர்வு

இதற்கு முன்னர் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது காணப்பட்ட அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தில் இருக்காது என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்தும் போது, அதற்கு அவசியமான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வொன்றை அடுத்த வருடத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறிப்பிட்டார்



குறுங்காலத் தீர்வு ஒன்றின் ஊடாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விடை கிடைக்காது என்றும், இயற்கை அனர்த்த நிலைமை என்பது மனிதர்களுக்கு கட்டுப்படுத்த முடியாதது எனவும், அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக நிரந்தரத் தீர்வைத் தேடிக்கொள்ளும் பொறுப்பு காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிகத் தீர்வாக கால்வாய்கள், ஆறுகள் மற்றும் வடிகான் கட்டமைப்பு என்பவற்றை சுத்தப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் செயற்பட்ட திட்டத்தின் முன்னேற்றக் கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இக்கலந்துரையாடல் அண்மையில் (19) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறுங்காலத் தீர்வாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புக்களை சுத்தம் செய்யும் திட்டத்திற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உப வேலை திட்டங்கள் 19 நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவற்றில் 12 திட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மேலும் ஏழு உப திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்டங்களை முடிவுறுத்துவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.  அச்செயற்பாடுகளை டிசம்பர் 31-ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தலாம்  எனவும்  அந்த அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில்  பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

அவ்வாறே கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப் படுத்திய  கொலன்னாவை மற்றும் கொடிகாவத்தை முல்லேரியா உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

வெள்ளப் பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிரந்தரத் தீர்வு

தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் (இ.க.நி.சே. தரம் I) – 2025

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I  அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக,  இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் (இ.க.நி.சே. தரம் I) – 2025

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador)  குழுவொன்று நேற்று (19) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

இராணுவ தளபதி கமாண்டோ பயிற்சி பாடசாலையின் புதிய நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தை திறந்து வைப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 19 டிசம்பர் 2024 அன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் நம்பிக்கை பயிற்சி வலயத்தை திறந்து வைத்துடன் இது குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் கமாண்டோ படையணியின் பயிற்சி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த வசதி இராணுவத்தின் நவீனமயமாக்கல் முயற்சிகளையும் குறிக்கிறது, ஏனெனில் இது இலங்கை இராணுவத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் புதுமையானது இது பிராந்திய மட்டத்தில் கூட அரிதாகவே காணப்படுகிறது.

வருகை தந்த இராணுவ தளபதியினை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் கமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.எச்.எம்.எஸ் விக்கிரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்றார். கமாண்டோ படையணி படையினரின் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து பயிற்சி வலயத்தை முறைப்படி திறந்து வைத்துடன் பெயர் பலகையினை இராணுவத் தளபதி திறைநீக்கம் செய்து வைத்தார்.

கமாண்டோக்களின் சின்னமான மெரூன் தலைகவசத்தினை பெற்றுக்கொள்வதில் ஒரு முக்கிய சவாலான நம்பிக்கை சோதனைத் பாய்ச்சலை எளிதாக்குவதற்கு நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் நிறுவப்பட்டது, இதன் மூலம் கமாண்டோ பயிற்சி பாடசாலையின் பயிற்சி உட்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

இந்த திட்டம், ஆரம்பத்தில் மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க (ஓய்வு) ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் கமாண்டோ படையணி படைத்தளபதியாக பதவி வகித்த காலத்தில் முன்மொழியப்பட்டதுடன், தளபதியின் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. கமாண்டோ பயிற்சி பாடசாலையின் தளபதி மற்றும் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன், பொறியியல் சேவைகள் படையணியின் நிபுணத்துவத்தின் மூலம் நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயம் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.

இராணுவ தளபதி கமாண்டோ பயிற்சி பாடசாலையின் புதிய நீர் நம்பிக்கைப் பயிற்சி வலயத்தை திறந்து வைப்பு