சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய் அவர்களுக்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது.
வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அபிவிருத்தியின் விடியலைக் கண்டுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டூ நகரம், சீனாவில் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.