All Stories

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் ஒன்றியத்தின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
 
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் கௌரவ பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்நாட்டின் இளைஞர்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் கொள்கை மற்றும் எண்ணக்கரு ரீதியான விடயங்களை ஒன்றியத்தின் ஊடாக விருத்தி செய்து அவற்றை அரச துறையிலுள்ள பொறிமுறைகள் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைய வேண்டியதன் தேவையை ஒன்றியத்தின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
 
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் தற்பொழுது தயாரிக்கப்பட்டு வரும் உத்தேச தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, உத்தேச கொள்கை வரைபு தொடர்பில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இளைஞர்களுடன் தொடர்புபட்ட சட்டங்களுக்கு மறுசீரமைப்புகளை பரிந்துரைத்தல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்தல், இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளல் மற்றும் இளைஞர்களுக்கான சர்வதேச ஒன்றியங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
 
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷன கமகே மற்றும் தனுர திசாநாயக உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கௌரவ பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்த வருடத்தில் 23,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை - பிரதமர் தெரிவிப்பு

தென் மாகாணத்தின் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெப்ரவரி 24 ஆம் திகதி மாத்தறையில் விசேட மாநாடு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) யினால் ஏற்பாடு செய்யப்பட்ட தென் மாகாண பிரதேச ஏற்றுமதியாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டை 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாத்தளையில் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தென் மாகாணத்தின் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெப்ரவரி 24 ஆம் திகதி மாத்தறையில் விசேட மாநாடு

தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் "தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சொந்தமாக வீடொன்றை அமைத்துக் கொள்ள, எவ்வித நிதி வசதியுமற்ற வறிய குடும்பங்களுக்காக நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிர்மாணப்பணிகள் நிறைவடைந்த வீடுகளை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் தேசிய அளவிலான செயற்திட்டம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
தமக்கென ஓரிடம் - அழகான வாழ்க்கை" தேசிய திட்டத்தின் கீழ் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நாளை.....

 
இலங்கை வனவிலங்கு வரலாற்றில் முதல் தடவையாக வனவிலங்கு துறை அதிகாரிகளுக்காக பதக்கம் வழங்கும் நிகழ்வு (21) நாளை சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் கிரிதலை தேசிய வனவிலங்கு ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நாளை.....

ஜனாதிபதியுடன் பல நாடுகளின் அரச தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்

இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்று வரும் AI தாக்கம் 2026 மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன், பல நாடுகளின் அரச தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பூட்டான் பிரதமர் தாக்சின் டோப்கே மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஆகியோரை நேற்று (பெப்ரவரி 19) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடாத்தப்பட்ட தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பல நாடுகளின் அரச தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்