All Stories

ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பு

புதிய அபிவிருத்தி யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயார்

                                                                                         - சீன ஜனாதிபதி

- இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், சமூகம் மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (15) பிற்பகல் சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பு

2024 இல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் அறிவித்தல்

2024 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயத்தின் பாதிப்புகள் பரீட்சிக்கப்பட்டு நிறைவடைந்துள்ள, மாவட்டங்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை விடுவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்து, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

2024 இல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் அறிவித்தல்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி - ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

செஸ் வரி மூலம் பெரும் வருமானத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் - அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஆலோசனை அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி - ஒரு மூட்டை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு  ஆரம்பம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping)
இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமானது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு  ஆரம்பம்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின்  (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன   கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு  அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும்

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த திருப்தி, நாட்டின் மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் உயர்தர சுகாதார சேவையை வழங்க உதவும்

பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் திட்டம்

விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து பெரும்போகத்திற்காக விசேட விதை நெல் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. உத்தரவாத விதை நெல்லை விவசாயிகளுக்கு வழங்குவதனால் தரமான மற்றும் வெற்றிகரமான அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கு இத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது. 

பெரும்போகத்திற்காக விசேட விதை  நெல் திட்டம்

நீர் விநியோகத் தடை தொடர்பான அறிவித்தல் 

அத்தியவசியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை (16) காலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) மாலை 6.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு  சபை தெரிவித்துள்ளது. 

நீர் விநியோகத் தடை தொடர்பான அறிவித்தல் 

உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நீர் மட்டத்தை கண்காணிக்கும் பொறியியலாளரின் ஆலோசனைப்படி, உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்காக வெளியேற்றும் வாயில்கள் ஏழும் 0.5 மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளன என்று பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.

உல்ஹிட்டிய - ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுகின்றன

கோப் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு

பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முதன்முறையாக அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீரவின் பெயரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், அதனை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ வழிமொழிந்தார்.

தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய கோப் குழுவின் புதிய தலைவர், குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகவும், எதிர்காலத்தில் பக்கச்சார்பின்றி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோப் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு

பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக  பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முதன்முறையாக அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.
கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் மாகாண கலாச்சாரத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா

கிழக்கு மாகாண சபையின் கலாச்சாரத் திணைக்களத்தினால் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவானது குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேலூர் மிட்சு மீள்குடியேற்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று (14) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர  தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர்   தலைமையில் மாகாண கலாச்சாரத் திணைக்களத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா

சிறந்த தொழில் சார் சூழலை வழங்குவதன் ஊடாக ஒரு சுகாதார நிபுணர் நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவார்

சிறந்த தொழில் சார் சூழலை வழங்குவதன் ஊடாக ஒரு சுகாதார நிபுணர் நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவார் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்ததுள்ளார். 

சிறந்த தொழில் சார் சூழலை வழங்குவதன் ஊடாக ஒரு சுகாதார நிபுணர் நாட்டு மக்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]