இலங்கை கடற்படையானது, 2026 மார்ச் 31 அன்று கல்பிட்டியவின் குடாவ கடலோரப் பகுதியில் நடத்திய ஒரு சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
இலங்கை கடற்படையானது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, 'முழு நாடும் ஒன்றாக' என்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான தேசிய திட்டத்திற்கு இணங்க, கடல் மண்டலத்தை உள்ளடக்கிய தீவிர கடற்படை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், இலங்கையின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது, பத்தொன்பது (19) சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) உள்ளூர் பல நாள் மீன்பிடிப் படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 29 நாட்களினுள் 175,661 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை நிலையத்தை நிரந்தர கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
2026 ஏப்ரல் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஏப்ரல் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும், உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, 'நிறுவனங்களிலிருந்து சமூகமயப்படுத்தும் குறைந்த வருமானங் கொண்ட தம்பதியினருக்கு வீட்டு வசதிகளை வழங்குவதற்கான நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை' அமுல்படுத்துவதற்காக 2025.08.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டம், திஹகொடவில் உள்ள மிடெல்லாவலப் புராதன விகாரையை மையமாகக் கொண்டு தேசிய வெசாக் விழாவை நடத்தவும், 2026 ஆம் ஆண்டு மே 27 முதல் ஜூன் 02 வரையிலான காலத்தை வெசாக் வாரமாக அறிவிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
மாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் யானையுடன் இணைந்து வாழுதல் என்ற தொனிப்பொருளில் மாவட்ட விவசாயிகளுக்கான பயிற்சி செயலமர்வு ஒன்று, கிளிநொச்சி வட்டக்கச்சியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இப் பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலத்திட்டத்தின் மற்றொரு நிலையான முன்னேற்ற நடவடிக்கையாக, Metro Uplift தேசியத் திட்டம் நேற்று (31) கொலன்னாவ, சாலமுல்லவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் தலைமையில் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
