போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான "முழு நாடுமே ஒன்றாக" செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (11) பி.ப 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.
2026 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 பெப்ரவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 41ஆ ஆம் உறுப்புரையின் கீழ் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் வரவிருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆர்வமுள்ள தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 12(1)(இ) ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு நியமனம் செய்வதற்கு கௌரவ ஜனாதிபதிக்கு விதப்புரையை மேற்கொள்வதற்கு சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோருகின்றது.
கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து விவசாயத் துறையில் முன்னேற்றத்துக்காக செயற்படுவதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.
பெப்ரவரி மாதத்தின் முதல் 8 நாட்களுக்குள் 80,776 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
‘டிட்வா’சூறாவளியின் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் இறுதிப்படுத்தல் பணிமனை இன்று (பெப்ரவரி 9) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
• பாராளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும்
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மியான்மார் அரசாங்கத்தினால் 500 மெற்றிக் தொன் அரிசி நேற்று (09) வர்த்தகம், வாணிபத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
'நச்சுப் போதைப் பொருளை இல்லாதொழிக்கும், முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின் நுவரெலியா மாவட்ட நிகழ்வு நாளை (11) நுவரெலியா கிரகோரி மைதான வளாகத்தில்; ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
