புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (ஜனவரி 02) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். வைஸ் அட்மிரல் பானகொட கடற்படையின் 26வது தளபதியாக பதவியேற்றதன் பின்னர் பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
மழை நிலைமை:
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில், ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து (03ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Clean Srilanka வேலைத்திட்டத்துடன் இணைந்து பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் வேகமாக பரவிவரும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் சிரமதான நிகழ்வொன்று இன்று (02) பொலன்னறுவையில் இடம்பெற்றது.
அரச ஊழியர்களாக வழங்கிய வாக்குறுதிக்கமைய பணியாற்றி 2025ம் ஆண்டினை மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் ஆண்டாக மாற்ற வேண்டுமென கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரின் மத்தியில் அமைந்துள்ள பிராமண கால்வாயப் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வருவதைப் பாதுகாப்பதற்காக, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார பிரதி அமைச்சருமான கமகெதர திஸாநாயக்க, அவர்களால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவு 3000 ரூபாய் வரை அதிகரிப்பு
சிறுநீரக நோயாளர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு டிசம்பர் மாதத்தின் பின்னர் குறைக்கப்படும் என்று வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று கிராமிய அபிவிருத்தி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]