*இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இறுதி அஞ்சலி செலுத்தினார்.*

*இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவிற்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இறுதி அஞ்சலி செலுத்தினார்.*
இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.
இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படுகிறது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்கள்,2025 ஜனவரி 1 முதல், கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
30-12-2024
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (30) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் கடற்படைத் தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் நாளை (31) தமது பதவிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
30-12-2024
பாடசாலை பிள்ளைகளிற்கு எழுதுவினைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்படுகின்றன
பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின் கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய “Household Survey on Impact of Economic Crisis – 2023" தரவுக் கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது. அதன் பிரகாரம், பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 55 சதவீதமானோர் கல்வியில் பாதகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 53.2 சதவீதமானோர் பாடசாலை எழுதுவினைப் பொருட்களை கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை எழுதுவினைப் பொருட்களை மீளப் பயன்படுத்துவதிற்கும் எண்ணியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எழுதுவினைப் பொருட்கள் கொள்வனவிற்காக பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இங்கு, பாடசாலைக் கல்வி பெறுகின்ற அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் பிள்ளைகளிற்காக ஒரு பிள்ளைக்கு ரூ. 6,000.00 எழுது கருவிப் பொருட்கள் கொள்வனவுக்கான கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு வேறாக்கப்பட்டுள்ளதுடன் அதனை 27.12.2024 இற்குள் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்துவதற்கு திறைசேரி ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், ஏனைய தகுந்த பாடசாலைப் பிள்ளைகளிற்கு 2025 ஆம் ஆண்டிற்கு ஒரு பிள்ளைக்கு தலா 6000 ரூபா பெறுமதியான எழுத்துக்கருவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது
இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கையாகும்.
எதிர்வரும் பெரும்போக விளைச்சலை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக, பல வருடங்களாக கைவிடப்பட்ட ஹிகுராங்கொட சதொச நெல் களஞ்சியசாலையை, நவீனமயப்படுத்தி உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக, இந்த நாட்களில் நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிகிரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி சுற்றுலா பாதுகாப்பை அதிகரிப்பதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் (KOICA) விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன் வைத்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் நமது பாதுகாப்புப் படைகளை நவீனமயப்படுத்த அதிகபட்ச முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் அடங்கிய ஒரு தொகுதி நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
நாளையிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான கறுவாச் செய்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கறுவா உற்பத்தி வருடத்திற்கு 25,000 மெற்றிக தொன் வரை என்பதுடன் அதில் 19,000 மெற்றிக் தொன் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையிலிருந்து இலத்தீன் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகமாகக் கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதுடன் அவை 60% ஆனவை ஆகும். இவற்றில் மெக்சிகோ முன்னணி வகிக்கிறது.
கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர குறிப்பிடுகையில்; தற்போது கறுவா ஏற்றுமதியினால் இலங்கைக்கு வருடத்திற்கு 250மில்லியன் டொலர் வெளிநாட்டு செலாவணி கிடைக்கிறது.
அது தவிர இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிராக கறுவா உற்பத்தியை முன்னேற்றுவதற்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி இதுவரை கிடைக்கப்பெற்ற வருமானத்தை இரு மடங்குகளாக அதிகரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரி அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், குறிக்கோள்களைத் தயாரிக்கும், அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டும் நிறுவனமாக இருக்க வேண்டும் - சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
கௌரவமான இலங்கை அரசின் அடிப்படைகளைத் திட்டமிடும், நோக்கு, குறிக்கோள்கள் என்பவற்றுக்கு வழிகாட்டும், அறிவார்ந்த வளத்தை உருவாக்குகின்ற, அரசியல்வாதிகளுக்கு சரியான வழிகாட்டல்களை வழங்குகின்ற நிறுவனமாக இலங்கை மன்றக் கல்லூரியை உருவாக்க வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரியின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்காக மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டு, கல்லூரியின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கீழ் தற்போது செயற்படும் இலங்கை மன்றக் கல்லூரி இன்று இலங்கையின் முன்னணி வயது வந்தோர் கல்வி மற்றும் பயிற்சி மத்திய நிலையமாக செயற்படுகின்றது.
இந்நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவையும் பார்வையிட்ட அமைச்சர், இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர், பணிப்பாளர் சபை மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் நிறுவனத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, கேட்டறிந்து கொண்டார்.
ஆராய்ச்சி, அறிவுசார் கலந்துரையாடல்களை கல்லூரி தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை மன்றக் கல்லூரியில் பணியாற்றும் சகல உத்தியோகத்தர்களும் அரசாங்கத்தின் போக்குகளுக்கு வழிகாட்டி, தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதான முக்கியமான பிரஜைகள் மற்றும் அதிகாரிகளாக உருவாக வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் எதிர்கால குறிக்கோள்களை அடையாளம் கண்டு செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், அதற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், புதிய இலங்கை அரசைக் கட்டியெழுப்பும் அடிப்படையைத் தயாரிக்கும் பொறுப்பு புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொறுப்பை மிகத் துல்லியமாகவும், பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தமது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேரமும் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அவ்வாறு முழுநேர அர்ப்பணிப்பில் தற்போது புதிய அமைச்சரவைக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர்கள் சந்தித்துக் கொள்ள முடியாது. தொலைபேசிக்கும் வருவதில்லை ஊடக அறிக்கைகளையும் வெளியிடுவதில்லை. நேர்முகக் கலந்துரையாடல்களிலும் பங்குபற்றுவதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருப்பதாக நினைவுபடுத்தினார்.
என்ன குற்றங்கள் முன்வைக்கப்பட்டாலும் அமைச்சரவை அயராது முழு நேரத்தையும் அர்ப்பணிப்பு செய்து, இலங்கை அரசுக்கு சிறந்த அத்திவாரத்தை உருவாக்குகின்ற பணியை எவ்வித குறைபாடுகளும் இன்றி மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தான் பொறுப்புடன் சுட்டிக்காட்டுகின்றேன்.
இந்த விதத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படாது, சரியான ஆராய்ச்சிகள் இன்றிய தரவு, தகவல்களின் அடிப்படையில் அன்றி ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக இருத்தல் அல்லது அதிகாரத்தில் தான் தோன்றித்தனமாக தீர்மானங்களை செயற்படுத்தியமையினால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அந்த நிலைமை எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் அமைச்சர் மேலும் விவரித்தார்.
இலங்கை மன்றக் கல்லூரி எவ்வளவு திட்டங்களை தயாரித்து உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள், கல்வி என வழங்கினாலும், அந்த செயற்பாட்டிற்காக பாரிய நிதி செலவிடப்பட்டாலும், பாரம்பரியத்திலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்குள் செயற்படுவதற்கும் சுயாதீனமாக சரியானதை மேற்கொள்வதற்கு ஏற்ற பலமான கொள்கையுடையவர்களாக இல்லாமைக்கு நாட்டின் அரச அதிகாரிகள் கூட பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே நாடொன்றிற்கு முன்னேறி செல்வதற்கு முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படும் அரசாங்கம், அமைச்சர்கள் தமக்கு நினைத்த விதமாக செயல்படுவதற்கு வாய்ப்பளிக்காது திட்டமொன்றைப் பின்பற்றி, முன்னோக்கிச் செல்வதற்கு வழிகாட்டலை வழங்கும் பொறுப்புடன், அதற்கான குறிக்கோள்களை தயாரிப்பதற்குப் பொருத்தமான நிறுவனம் இலங்கை மன்றக் கல்லூரியே என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, இலங்கை மன்றக் கல்லூரியின் தலைவர் எஸ். எம். சமன் சமரக்கோன், பணிப்பாளர் நாயகம் ரித்மா குணசேகர மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]