All Stories

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு நாட்டிற்குத் தேவை  -பாதுகாப்பு பிரதி அமைச்சர் 

தியத்தலாவை இலங்கை இராணுவ கலாசாலையில் (SLMA) புதிதாக அதிகாரம் பெற்ற 222 அதிகாரிகளை தேசத்திற்காக  அர்ப்பணிக்கும் நிகழ்வு கடந்த 11ம் திகதி  பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது. 

கென்யா, உகாண்டா, காம்பியா மற்றும் செம்பியாவைச் சேர்ந்த 10 வெளிநாட்டு கெடெட் அதிகாரிகளும் இதில் உள்ளடங்குவர். அத்துடன், இந்திய தேசிய பாதுகாப்பு கலாசாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி கலாசாலை அத்துடன் பங்களாதேஷ் இராணுவ கலாசாலை மற்றும் பாகிஸ்தான் இராணுவ கலாசாலை போன்ற புகழ்பெற்ற இராணுவ பயிட்சி கலாசாலைகளில் வெளிநாட்டு பயிற்சியை முடித்த பதின்மூன்று இலங்கை கெடெட்  அதிகாரிகளுக்கும் இந்நிகழ்வின் போது அதிகாரம் அளிக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு பாதுகாப்பு பிரதி  அமைச்சர் புதிய அதிகாரிகளைப் பாராட்டிப் பேசுகையில், “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியம்" என வலியுறுத்தினார்.

பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு),  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு நாட்டிற்குத் தேவை  -பாதுகாப்பு பிரதி அமைச்சர் 

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 32 வது தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2024 டிசம்பர் 20 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

கண்டி மாவட்டத்தில் பெரும் போகத்தின் போதான சகல உரத் தேவைப்பாடுகளும் முழுமையாக நிறைவு  - தேசிய உர தலைமை அலுவலகம்

கண்டி மாவட்டத்தில் பெரும் போகத்திற்கான சகல உரத் தேவைப்பாடுகளும் தற்போது பூர்த்தி அடைந்துள்ளதாக தேசிய உர தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் பெரும் போகத்தின் போதான சகல உரத் தேவைப்பாடுகளும் முழுமையாக நிறைவு  - தேசிய உர தலைமை அலுவலகம்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அதெனியி (Kunle Adeniyi)  ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Takafumi Kadono இன்று  பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இந்த கலந்துரையாடலின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாக புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று டிசம்பர் 20 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

வெள்ளப் பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிரந்தரத் தீர்வு

இதற்கு முன்னர் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது காணப்பட்ட அரசியல் செல்வாக்கு தற்போதைய அரசாங்கத்தில் இருக்காது என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்தும் போது, அதற்கு அவசியமான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தரத் தீர்வொன்றை அடுத்த வருடத்தில் தயாரித்து முடிக்க வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறிப்பிட்டார்



குறுங்காலத் தீர்வு ஒன்றின் ஊடாக வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விடை கிடைக்காது என்றும், இயற்கை அனர்த்த நிலைமை என்பது மனிதர்களுக்கு கட்டுப்படுத்த முடியாதது எனவும், அவற்றுக்கு முகம் கொடுப்பதற்காக நிரந்தரத் தீர்வைத் தேடிக்கொள்ளும் பொறுப்பு காணப்படுவதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்காக பொதுமக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தற்காலிகத் தீர்வாக கால்வாய்கள், ஆறுகள் மற்றும் வடிகான் கட்டமைப்பு என்பவற்றை சுத்தப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் செயற்பட்ட திட்டத்தின் முன்னேற்றக் கலந்துரையாடலின் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

 

இக்கலந்துரையாடல் அண்மையில் (19) அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இடம் பெற்றது. கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குறுங்காலத் தீர்வாக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகான் கட்டமைப்புக்களை சுத்தம் செய்யும் திட்டத்திற்காக 19 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி உப வேலை திட்டங்கள் 19 நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அவற்றில் 12 திட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

மேலும் ஏழு உப திட்டங்களை முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இத்திட்டங்களை முடிவுறுத்துவதற்கான காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும்.  அச்செயற்பாடுகளை டிசம்பர் 31-ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தலாம்  எனவும்  அந்த அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில்  பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

அவ்வாறே கொலன்னாவை நகர சபை, கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப் படுத்திய  கொலன்னாவை மற்றும் கொடிகாவத்தை முல்லேரியா உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.

வெள்ளப் பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிரந்தரத் தீர்வு

தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் (இ.க.நி.சே. தரம் I) – 2025

அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் அறிவித்தலுக்கு இணங்க, தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I  அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்றதாக,  இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் I அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புதல் (இ.க.நி.சே. தரம் I) – 2025

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் உலகில் முதன்முறையாக 100 சிறப்புப் பயிற்சி பெற்ற வர்த்தக நாம தூதர்கள் (brand ambassador)  குழுவொன்று நேற்று (19) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தன்னார்வ சேவைக்காக நியமிக்கபட்டது.

உலகில் முதன்முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 100 பிராண்ட் அம்பாசிடர்கள் (brand ambassador) நியமிக்கபட்டார்கள்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]