'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகினர்.
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டபோதும் மற்றும் மின் உற்பத்தியின்போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஏப்ரல் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) சந்தேக நபர்களுடன் ஒரு உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பல் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆட் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்துப் பொதுச் சேவைகளும் நாளை (17.04.2026) செயல்பட மாட்டாது என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இலங்கை கடற்படை, 2026 ஏப்ரல் 14 அன்று மன்னார் வங்காலை கடற்கரையில் நடத்திய ஒரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு (01) டிங்கி மற்றும் மூன்று (03) சந்தேக நபர்களிடமிருந்து இருபத்தாறு (26) கிலோகிராமுக்கும் அதிகமான ஆமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.
"இலங்கையில் அமைதிக்கான நடைப்பயணம்" (Walk for Peace Program in Sri Lanka) நிகழ்ச்சிக்காக, பௌத பிக்குகள் குழு ஒன்று இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலக பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ASEAN Plus Cadet Sail (APCS) – 2026 திட்டத்தின் கீழ், இந்தோனேசிய கடற்படையைச் சேர்ந்த கேடட் அதிகாரிகள் உட்பட இருபத்தாறு (26) வெளிநாடுகளைச் சேர்ந்த கேடட் அதிகாரிகளுடன், இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘KRI BIMA SUCI - 945’ நல்லெண்ணப் பயணத்திற்காக நேற்று (2026 ஏப்ரல் 15) தீவிற்கு வந்தடைந்ததையடுத்து, கடற்படை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பலை வரவேற்றனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]