All Stories

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

சுற்றுலா ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக சில ரயில் சேவைகள் ஆரம்பம்

சுற்றுலா கைத்தொழில் முன்னேற்றுதல் மற்றும் தூரப் பயண சேவைக்காக புதிய புகையிரத சேவைகள் சிலவற்றை ஆரம்பிப்பதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மலையகப் பாதையில் புகையிரதப் பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான, மிகவும் கவர்ச்சிகரம் மற்றும் அந்தப் புகையிரதப் பயணத்திற்கு காணப்படும் அதிக கேள்வி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக சில ரயில் சேவைகள் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது  புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது  	புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்

சுத்தமான இலங்கை திட்டம் குறித்த மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது

"சுத்தமான இலங்கை" திட்டம் குறித்து அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவுறுத்த மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த பாதுகாப்பு அமைச்சில இன்று (ஜனவரி 24) மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கமைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிராமப்புற வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்களை ஊக்குவித்தல் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட முக்கிய சமூக-பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுத்தமான இலங்கை திட்டம் குறித்த மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.


மழை நிலைமை:

மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

25 ஜனவரி 2025 திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு , மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல இடங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்யக்கூடும். மேல் மாகாணத்தில் காலை வேளையில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளில் மற்றும் வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 தொடக்கம் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணம் காலி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் காலை வேளையில் பணி மூட்டம் அதிகம் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்காக அவசியமான முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையிலிருந்து  எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு - சுவிட்சர்லாந்து  அரசாங்கத்தின் ஆதரவு

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து  அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து  எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு - சுவிட்சர்லாந்து  அரசாங்கத்தின் ஆதரவு

2025 ஆம் ஆண்டில் ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு 650 பேர் ஆட்சேர்ப்பு

மொரட்டுவையில் உள்ள இலங்கை ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 650 பயிலுனர்களைக் கொண்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு விழா நேற்று (23) தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தலைமையில் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டில் ஜெர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு 650 பேர் ஆட்சேர்ப்பு

2025 ஆம் ஆண்டில் 340,000 வெளிநாட்டு வாய்ப்புக்கள்  - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர்

2024ஆம் ஆண்டில் 311,000 ஆக இருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் 2025ஆம் ஆண்டில் நூற்றுக்கு 12வீதத்தால் அதிகரித்து 340,000  இலங்கையர்களை  இவ்வருடத்தில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். 

2025 ஆம் ஆண்டில் 340,000 வெளிநாட்டு வாய்ப்புக்கள்  - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர்

பிலிப்பைன்ஸ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களைச் சந்தித்தனர்.

பிலிப்பைன்ஸ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று (23) தேர்தல் ஆணைக்குழுவிற்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

பிலிப்பைன்ஸ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்களைச் சந்தித்தனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு –பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண்கள் தொடர்பான மேன்முறையீடுகளை 2025 ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்; அறிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு –பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இற்கமைய, மத்திய வங்கியானது நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கினைக் குறித்துரைக்கப்பட்ட இடைவெளியொன்றினுள் தொடர்ச்சியான இரண்டு காலாண்டுகளில் பூர்த்திசெய்யத் தவறினால் நாணயக் கொள்கைச் சபையானது நிதியமைச்சரினூடாகப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்கத் தேவைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது பொதுமக்களுக்குக் கிடைப்பனவாகவும் இருத்தல் வேண்டும்.

 

மாண்புமிகு நிதியமைச்சருக்கும் மத்திய வங்கிக்குமிடையே 2023 ஒத்தோபர் 03ஆம் நாளன்று கைச்சாத்திடப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது 5 சதவீதத்தை பணவீக்க இலக்காக விதித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(5)இன் நோக்கத்திற்காக இடைவெளியை ±2 சதவீதப் புள்ளிகளாகக் குறிப்பிடுகின்றது.

நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]