All Stories

சுகாதார அமைச்சு, கண்டி தேசிய மருத்துவமனைக்கு ரூ. 425 மில்லியன் மதிப்புள்ள இரண்டு உயர் தொழில்நுட்ப நவீன இயந்திரங்களை வழங்கியுள்ளது

சுகாதார சேவையின் பௌதீக வளங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டி தேசிய மருத்துவமனைக்கு ரூ. 425 மில்லியன் செலவில் வழங்கப்பட்ட இரண்டு உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன.

சுகாதார அமைச்சு, கண்டி தேசிய மருத்துவமனைக்கு ரூ. 425 மில்லியன் மதிப்புள்ள இரண்டு உயர் தொழில்நுட்ப நவீன இயந்திரங்களை வழங்கியுள்ளது

போக்குவரத்து செயற்பாட்டுத் திட்டத்தினால் நாட்டில் வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

"பதினெட்டு மாதங்களுக்குபோக்குவரத்து செயற்பாட்டுத் திட்டத்தினால் நாட்டில் வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசாங்கம், பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்காகப் பல நீடித்த திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

போக்குவரத்து செயற்பாட்டுத் திட்டத்தினால் நாட்டில் வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

 

மழை நிலைமை: 

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

 

2026 ஏப்ரல் 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஏப்ரல் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

பொது வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதும் அவற்றைப் பாதுகாப்பதும் பிரஜைகளின் பொறுப்பாகும். -அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

ரக்னா  அரக்ஷக லங்கா லிமிடெட் ரூ. 111 மில்லியன் இலாப பகிர்வை  திறைசேரிக்கு  ஒப்படைத்தது; நிகர இலாபம் 74% தினால் அதிகரிப்பு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி அரசிற்குச் சொந்தமான நிறுவனமான ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் (RALL), அண்மையில் (ஏப்ரல் 23) தனது 2024/2025 நிதியாண்டிற்கான வருவாயிலிருந்து ரூ. 111,110,014.00 இலாப பகிர்வை  பொது திறைசேரிக்கு  அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. நிறுவனத்தின் தலைவர், பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ (ஓய்வு), கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில், இத்தொகைக்கான காசோலையை பாதுகாப்பு பிரதி அமைச்சர்,  மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவிடம் (ஓய்வு) கையளித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் காசோலையை  பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், திருமதி தனீஷா ஜயதேவவிடம் ஒப்படைத்தார்.

ரக்னா  அரக்ஷக லங்கா லிமிடெட் ரூ. 111 மில்லியன் இலாப பகிர்வை  திறைசேரிக்கு  ஒப்படைத்தது; நிகர இலாபம் 74% தினால் அதிகரிப்பு