All Stories

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

2025 ஜனவரி 31 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் Multirole Light Frigate ரக 'KRI BUNG TOMO - 357' போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 01) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'KRI BUNG TOMO - 357' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கையை விட்டுச் சென்றது

பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இலங்கை விமானப்படையின் மூன்று விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நேற்று (2) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க

படைத்தளபதி 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 31 அன்று 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார்.

படைத்தளபதி 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக   மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025.02.02

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக   மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பொருட்கள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து  கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கு நிதி ஒதுக்கீடு

வெளிநாட்டு செலாவணியை மீதப்படுத்தி உள்நாட்டு புதிய கண்டுபிடிப்பின் ஊடாக யானை - மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு 

இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை - மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான பூர்வமான தீர்வொன்றாக உள்நாட்டு யானை வேலிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய பொறியியலாளர் மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் NERDC) பொறியியலாளர்களினால் சாத்தியமாகியுள்ளது.
வெளிநாட்டு செலாவணியை மீதப்படுத்தி உள்நாட்டு புதிய கண்டுபிடிப்பின் ஊடாக யானை - மனித மோதலுக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தீர்வு 

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிரதமர் தலைமையில்...

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வின் தலைமையில் முன்பிள்ளைப் பருவ விருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பகட்ட கலந்துரையாடல் "இசுறுபாய" கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்கும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் பிரதமர் தலைமையில்...

தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம் - 77ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

"தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" - 77ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் மிகவும் விமர்சையாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது.
 
குறைந்த செலவில், மக்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறைந்ததாக மற்றும் அதிக மக்களின் பங்களிப்புடன் இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு அமைச்சர் திட்டமிட்டுள்ளது. 
 
படைவீரர்கள் 1,870 என்ற எண்ணிக்கைக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இம்முறை படைவீரர்களின் அணிவகுப்பில் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 1,511 ஆக குறைக்கப்பட்டது. 
 
இம்முறை அணிவகுப்பிற்காக முப்படை வீரர்களின் வாகன அணி வகுப்பை நடத்தாத இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 19 விமானங்கள் சுதந்திர தின வைபவத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை தேசிய கொடியை  வானில் ஏற்றிச் செல்வதற்காக விமானங்கள் 3 மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன. 
 
சம்பிரதாய முறைப்படி சுதந்திர தின நிகழ்வுகளுடன் இணைந்ததாக கடலில் நண்பகல் 12 மணிக்கு  கப்பலில் கடற்படையினரால் 25 மரியாதை வேட்டுக்கள் நடாத்தப்படவுள்ளன.
தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம் - 77ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]