வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால் 2026 மே 09 ஆம் திகதி பிற்பகல் 06.30 மணியில் வெளியிடப்பட்டது.
அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ‘பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு’ (Public Impact Champions Network - PIC-Net) நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய வெளிப்புற நடவடிக்கை சேவையின் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுவர் மரியா கஸ்டிலோ பெர்னாண்டஸ், இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்தார்.
70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் 500,000 ரூபாய் பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (08) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்துடனான இணைந்த வகையில் ஸ்தாபிக்கப்பட்ட நிர்மாண மற்றும் கட்டிட (C&D) கழிவு முகாமைத்துவத்திற்கான மீள்சுழற்சி மத்திய நிலையம் நேற்று (08) முற்பகல் ஏகலை கைத்தொழில் பேட்டையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை - வியட்நாம் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்
கொழும்பு - ஹோ சி மின் நகருக்கு இடையே Vietnam Airlines மற்றும் VietJet Air நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதற்காக 450 மில்லியன் ரூபா மதிப்பிலான திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நேற்று (08) விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன், பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு, 2026 மே 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.


