All Stories

பிரதேச பதிவாளர் பிரிவுகளை வலுப்படுத்த நடவடிக்கை: 100 அதிகாரிகளுக்கு புதிய கணனி தொகுதிகள் வழங்கி வைப்பு

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ‘ஒரே பதிவு’ (One Registry) வேலைத்திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களில் பணியாற்றும் 100 பதிவாளர் அதிகாரிகளுக்கு புதிய கணனி உபகரணங்களை வழங்கும் விசேட நிகழ்வு நேற்று (07) பதிவாளர் நாயகம் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பிரதேச பதிவாளர் பிரிவுகளை வலுப்படுத்த நடவடிக்கை: 100 அதிகாரிகளுக்கு புதிய கணனி தொகுதிகள் வழங்கி வைப்பு

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (08) முற்பகல் கொழும்பு பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) ஆகியோர் முன்னிலையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

இலங்கை மன்றக் கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக 75 மில்லியன் ரூபாயை திறைசேரிக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

இலங்கை மன்றக் கல்லூரியின் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 135 மில்லியன் ரூபாய் நிதியில் 75 மில்லியன் ரூபாய் களை மீண்டும் பொதுத் திறைசேரிக்கு வழங்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.

இலங்கை மன்றக் கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக 75 மில்லியன் ரூபாயை திறைசேரிக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

இலங்கையின் ஆடை ஏற்றுமதியை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கும் ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தியாளர் சங்கங்களின் மன்றத்திற்கும் (JAAF) இடையேயான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் பிரதான ஏற்றுமதித் துறையான ஆடைத் தொழில் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் மற்றும் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நேற்று (07) நடைபெற்றது.

இலங்கையின் ஆடை ஏற்றுமதியை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கும் ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தியாளர் சங்கங்களின் மன்றத்திற்கும் (JAAF) இடையேயான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மகத்தான வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (TO LAM) அவர்களை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மகத்தான வரவேற்பு