All Stories

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு)  எயார் வைஸ் மார்ஷல்  சம்பத் தூயகொந்தா இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) 8வது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார் . இந்த விழா நேற்று (பெப்ரவரி 14) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரியின் 8வது வருடாந்த கல்வி மாநாட்டை பாதுகாப்பு செயலாளர் ஆரம்பித்து வைத்தார்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025பெப்ரவரி 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 16 ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 பெப்ரவரி 16 ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
வானிலை முன்னறிவிப்பு

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக  வேந்தராக வண. கல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி முத்தலம்பிட்டி கடற்பகுதி மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் குள பகுதியில் 2025 பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்து மற்றும் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 5 பேர் கொண்ட நான்கு (04) மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று ஐம்பது (250) சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைது செய்யப்பட்டன.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்கள் கைது

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல் - 2025

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை தபால்/ உப தபால் அலுவலகங்களினூடாக பெப்ரவரி மாதம் 20 ஆம் திதியிலிருந்து செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு அறிவித்துள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல் - 2025

ஒரே மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டம்

பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை சேவைகளை ஒரே மருத்துவமனையில் வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கவும், இந்த திட்டத்தை பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையிலிருந்து ஆரம்பிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

ஒரே மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டம்

கட்டியெழுப்பப்படும் கதுருவெல மும்மொழி பாடசாலை பிரதமரின் கண்காணிப்புக்கு

இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலனறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று பெப்ரவரி 14ம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

கட்டியெழுப்பப்படும் கதுருவெல மும்மொழி பாடசாலை பிரதமரின் கண்காணிப்புக்கு

உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூன்று நீதிபதிகள் கொண்ட குழாத்தினால் விசாரிக்கப்பட்ட "உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (14) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)" எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கை   கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  ராமலிங்கம் சந்திரசேகர்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரதப் பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின்  பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார்.

நேற்று (13) இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த புகையிரதப் பாதையில் முதலாவது கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை, இரண்டாம் கட்டமாக இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையும், மூன்றாம் கட்டமாக எம்பிலிபிட்டிய, சூரியவெவ, மத்தளை ஊடாக ஹம்மாந்தோட்டை துறைமுகம் வரையும் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

1970கள் வரை கொழும்பில் இருந்து கஹவத்தை வரையான புகையிரத சேவை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரதப் பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]