All Stories

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

 

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக 2025 பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி கடமைப் பொறுப்பேற்பு

பதுளை மாவட்டத்தின் ஹாலி எலவிற்கு 6,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கல் திட்டம்

பாரிய பண்டாரவளை நீர் திட்டத்தின் முதலாம் கட்டமாக ஹாலி எல, குருகுதய பிரதேசத்தில் 10,000 கன மீட்டர் கொள்ளளவுடனான சுத்திகரிப்பு கட்டமைப்பிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யா ரத்னவின் தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.

பதுளை மாவட்டத்தின் ஹாலி எலவிற்கு 6,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கல் திட்டம்

2025 வரவுசெலவுத்திட்டம் இன்று மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) இன்று (17ஆம் திகதி) மு.ப 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2025 வரவுசெலவுத்திட்டம் இன்று மு.ப 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே அவர்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை நேற்றையதினம் (16.02.2025) பார்வையிட்டனர்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் யாழ் வருகை

சீரான வானிலை

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீரான வானிலை

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோருகின்றன

 

· பெப்ரவரி 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படப் போவது ஏழை மக்களை கருத்திற்கொண்ட வரவு செலவுத்திட்டமாகும்

- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய -

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவை கோருகின்றன

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம்.

சிறந்த கல்வியின் மூலம் சமூகத்திற்கு நல்லொழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த தலைமையை உருவாக்குவது எமது பொறுப்பு

- பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய-

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று (15) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் மிக உயர்ந்த தரத்திலான கல்வியை வழங்குவதே எமது நோக்கம்.

சுகாதார மற்றும் ஊடகத்துறைகளை முன்னேற்றுவதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி

இலங்கையின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக கொரிய அரசாங்கத்தின் உதவி வழங்கப்படும் என கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறைகளை முன்னேற்றுவதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழா இன்று (15) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

1923ஆம் ஆண்டு அரச ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக நிறுவப்பட்ட இந்தக் கலாசாலை 2023ஆம் ஆண்டு 100 ஆண்டுகளை நிறைவு செய்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

"கல்வி சீர்திருத்தத்தில் ஆசிரியர்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். கல்வி என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான சிறந்ததும் வலுவானதுமான உறவாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களின் பலத்துடன் நிகழ வேண்டும்.

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]