All Stories

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின்வெற்றிகரமான சர்வதேச இராணுவ பேரவை ஓட்டம்

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவம் 2025 பெப்ரவரி 18 ம் திகதி அன்று சர்வதேச இராணுவ விளையாட்டு பேரவையினால் ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளிடையே உடற்தகுதி, இராணுவ தயார்நிலை மற்றும் சர்வதேச நட்புறவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட முப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

உலக இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரின்வெற்றிகரமான சர்வதேச இராணுவ பேரவை ஓட்டம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 20ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவிப்பு 

2025 பெப்ரவரி 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது

காலி, மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் சில இடங்களில் மலை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 

நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான காலநிலை நிலவும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்தி, வடமத்தி, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டத்துடனான நிலைமை காணப்படும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல்

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு பின்வருமாறு:IMG 20250219 WA0017

உள்ளூரதிகார சபைகள் தேர்தல் - 2023 வைப்புப் பணம் மீளளித்தல்

தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு

2025 அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கை தொடர்பாக இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் பாராட்டுக் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் வருடத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட அறிக்கைனால் காணப்படும் வரையறுக்கப்பட்ட நிதி அளவினுள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேடமாக அடிப்படைச் சம்பளம் மிகவும் பெறுமதியானதாக அதிகரைப்பதன் ஊடாக பாரியளவில் குறைந்த சம்பளம் வரும் அரசாங்க ஊழியர்களுக்கு சாதாரணமாக திட்டமிடுவதற்கு அதிக முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக எமது சங்கம் அவதானித்துள்ளது.

விஷேடமாக வரியை தவிர்ப்பதற்கான நிதி கொடுக்கல் வாங்கல்கள், டிஜிட்டல் கட்டமைப்பை பயன்படுத்தி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல், வரி சேகரிப்பு நிறுவனங்களை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேலும் உறுதி செய்வதற்காக அவர்களுக்கு உயர் இலக்கை வழங்குதல், வரி ஆலோசகர்கள் போன்றவர்கள் தொடர்பாக மக்களின் கருத்தை சரியான வரவு செலவுத் திட்ட அறிக்கை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வெளியிட்டமை மிகவும் பாராட்டத்தக்கது.

தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கை நிருவாக சேவைச் சங்கத்தின் பாராட்டு

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

 
முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம், 2028 ஆம் ஆண்டளவில் கடன் திருப்பிச் செலுத்தும் சாத்தியம் எதிர்பார்க்கப்படுகிறது. - 2025 வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரான கருத்தாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

எக மிடட கொவி பிமட தேசிய திட்டம் ஆரம்பம்

 
“எக மிடட - கொவி பிமட” தேசிய திட்டம் அண்மையில் (15 ) கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் தலைமையில் பொல்கஹவெல ஹொதல்ல ஜய சுந்தரா ராம விகாரை அமைந்துள்ள வயல் பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
எக மிடட கொவி பிமட தேசிய திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளமைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார். அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளமைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றி தெரிவிப்பு

நாடளாவிய கப்ருக சமூக வலுவூட்டல் திட்டம் இன்று கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகிறது

தெங்கு பயிர்ச் செய்கையில் தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்ளும்; தேசிய தேவைக்கு ஏற்ப, நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வரும் கப்ருக சங்கங்களை மறுசீரமைத்து அதிகாரமளிப்பதற்கான விசேட திட்டத் தொடரின் முதல் நிகழ்ச்சித்திட்டம் இன்று (19) கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய கப்ருக சமூக வலுவூட்டல் திட்டம் இன்று கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பமாகிறது

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தனர்

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் நேற்றையதினம் (18) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர். இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தனர்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது தளபதியாக 2025 பெப்ரவரி 17 ம் திகதியன்று இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

சுத்தமான இலங்கை” திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு கருத்தரங்கு

“சுத்தமான இலங்கை” திட்டத்தை முறையாக செயல்படுத்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸின் தெரிவுசெய்யப்பட்ட 150 உறுப்பினர்களைப் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்கான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 18) பனாகொடை இலங்கை இலகுரக காலாட்படை படைப்பிரிவு வளாகத்தில் ஆரம்பமாகியது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) வரவேற்பு உரையை நிகழ்த்தி, பங்கேற்ற அனைத்து அதிகாரிகளையும் கருத்தரங்கிற்கு வரவேற்றார்.

சுத்தமான இலங்கை” திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு கருத்தரங்கு

நீலகிரி ஸ்தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டைசெய்யும் வைபவம் குறித்து விசேட கலந்துரையாடல் 

நீலகிரி ஸ்தூபியின் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மார்ச் 04, (2025) ஸ்துபியில் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களைப் பிரதிஷ்டை செய்யும் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நீலகிரி ஸ்தூபியின் புனித சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை பிரதிஷ்டைசெய்யும் வைபவம் குறித்து விசேட கலந்துரையாடல் 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]