All Stories

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

மே 19 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026 OSGA வருடாந்த விரிவுரையின் (2026 OSGA Annual Lecture) பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 'அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்' (The Politics of Development: Sri Lanka and Beyond) எனும் தலைப்பில் சிறப்புரையை நிகழ்த்தினார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்புரை

"குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிடுவதைத் தடுப்போம்" என்ற கருப்பொருளின் கீழான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கம்பஹாவில்

"குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிடுவதைத் தடுப்போம்" என்ற கருப்பொருளின் கீழான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கம்பஹாவில்..

கம்பஹா மாவட்டத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் கம்பஹா மாவட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுவின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டுக் கூட்டம், மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே அவர்களின் தலைமையில் நேற்று (19) மாவட்டச் செயலகக் கலையரங்கில் நடைபெற்றது.

 "குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர்கள் சண்டையிடுவதைத் தடுத்தல்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தவும், அது தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமும் அபாயத்தில் உள்ள குடும்பங்களின் பெற்றோருக்குக் விழிப்புணர்வூட்டவும் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஓய்வூதிய திருத்தத்தின் முதல் கட்டத்தில் 98% செலுத்தப்பட்டுள்ளது

ஓய்வூதிய திருத்த செயல்முறையின் தற்போதைய முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பேராசிரியர் சந்தன அபயரத்ன, அண்மையில் (18) ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஒரு விசேட ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
ஓய்வூதிய திருத்தத்தின் முதல் கட்டத்தில் 98% செலுத்தப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி - மட்டக்களப்பு பொது நூலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்

டெங்கு விழிப்புணர்வு வாரம் மே 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (19.05.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
டெங்கு விழிப்புணர்வு வாரம் மே 25 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை - அரசாங்க அதிபர் தெரிவிப்பு

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல என்றும், அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மே 19 ஆம் திகதி சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக் கற்கை நிறுவகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். 

அரசியல் என்பது அபிவிருத்தியிலிருந்து பிரிந்த ஒன்றல்ல. அரச நிர்வாகத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு தெரிவும் தீர்மானமும் அதன் மூலமே வடிவமைக்கப்படுகின்றன     பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய