நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக தென்னைப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை செயல்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக தென்னைப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை செயல்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.
மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளதாக ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
2025/26 இலிருந்து தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டியை பாடசாலைகள், அரச, உற்பத்தி மற்றும் சேவை போன்ற பிரதான துறைகளின் கீழ் மீண்டும் நடாத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான கொள்வதற்கான உபாயமாக இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்மாதிரியான நிறுவனங்களை அடையாளம் காணுதல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பிற்கு உள்ளான மற்றும் வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் நிலைபேறான வளர்ச்சிக்காக எதிர்கால உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு அரச நிறுவனங்களைத் தயார்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் 2003 ஆம் ஆண்டில் இந்த தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் போட்டி அறிவிக்கப்பட்டதுடன் 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்த போட்டி நடாத்தப்படவில்லை.
விவசாய திணைக்களத்தின் கீழ் செயல்படும் இலங்கை விவசாயக் கல்லூரியில் நடைபெறும் விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான உயர் தேசிய டிப்ளோமா (NVQ6) பாடநெறியைத் தொடர்வதற்கான புலமைப் பரிசிலுக்காக உரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள திணைக்கள, மாகாண சபைகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 20 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தானியங்கி பொருள் முகாமைத்துவ அமைப்பு - பதிப்பு 2 மற்றும் myQ1 பயன்பாட்டின் அதிகாரப்பூர்வ வெளியீடு 2025 பெப்ரவரி 19, அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் கௌரவ ஜூலி சங் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2025 பெப்ரவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக இந்த வருடம் (2025) பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 1000 பாடசாலைகளின் பாடசாலை வளாகங்களை துப்பரவு செய்து பழுதடைந்த கதிரை மேசைகள் உட்பட பாடசாலை உபகரணங்களை பழுதுபார்க்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புரிதல் மற்றும் உதவியை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், குறிப்பாக 30 ஆண்டுகால உள்நாட்டு மோதலின் போதும், இயற்கை பேரழிவுகளின் போது நிதி உதவி உட்பட, ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்பட மனிதாபிமான உதவிகள் விலைமதிப்பற்றது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]