All Stories

ஜனாதிபதி மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் சந்திப்பு

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2024இன் இரண்டாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2024இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது.

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2024இன் இரண்டாம் அரையாண்டு

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு பிரவேசத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலான கருத்தரங்கொன்று நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

"கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைக்கும் நிறுவனங்களுக்கு தௌிவூட்டல் கருத்தரங்கு

வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி28ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 28ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

உள்ளூர் அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தியை அதிகரிப்பதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் கவனம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, உள்ளூர் அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தி  சரியான முறையிலும், தரநிலைகளின்படியும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குவதன் மூலமும், தொழில்துறையினரை ஊக்குவிப்பதன் மூலமும், நாட்டின் சுகாதார அமைப்பு தொடர்ந்து அறுவை சிகிச்சை துணியைப் பெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியுள்ளார்.

உள்ளூர் அறுவை சிகிச்சையின்போது பாவிக்கப்படும் துணி உற்பத்தியை அதிகரிப்பதில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் கவனம்

நேர்மைத்திறனான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி அலுலகம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இணைந்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரிவு (IAU) மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் (AIA) மதிப்பீடு குறித்த செயலமர்வு இன்று (27) கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.

நேர்மைத்திறனான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி அலுலகம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இணைந்து அரச அதிகாரிகளுக்கு செயலமர்வு

“வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்புக்குள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துங்கள்” – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

– அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை
வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
 
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதன்படி செலவு முகாமைத்துவத்தின் போது அரசாங்க அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
 
அரசாங்க சேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு எண்ணம் காணப்படவில்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச சேவைக்குள் காணப்படும் வினைத்திறன் இன்மையே அதற்கு காரணமெனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல் அரச ஊழியர்களிடையே காணப்படும் திருப்தியின்மையே வினைத்திறன் இல்லாமைக்கு காரணமாக அமைந்துள்ளதெனவும், அந்த பிரச்சினைகளை தீர்த்து அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
 
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகார தரப்பும் செலவுகளை குறைத்திருக்கும் நிலையில், அரச நிறுவனங்களின் நிர்வாகச் செலவை குறைத்தல் மற்றும் விரயத்தை குறைத்தல் என்பன அரச சேவையின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
 
அரச சேவையின் செலவுகளை குறைப்பதற்காக அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டு வருதல், அதிக பராமரிப்புச் செலவுடன் கூடிய வாகனங்களை மார்ச் மாதமளவில் ஏல விற்பனை செய்யும் திட்டம், பாவனை செய்யாத அலுவலக உபகரணங்களை ஒதுக்குதல், மூடப்பட வேண்டிய நிறுவனங்கள், ஒருங்கிணைக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் மற்றும் அரச, தனியார் கூட்டிணைவுக்கு வழங்க வேண்டிய நிறுவனங்களை அறிந்துகொண்டு அதற்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜீ.பீ.சபுதந்திரி உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.
“வரையறுக்கப்பட்ட நிதி கட்டமைப்புக்குள் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துங்கள்” – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

நீண்ட கால நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது - தொழில் அமைச்சு

நீண்ட கால நிலையான வேலை வாய்ப்பு  வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது என்று தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்றும், இதுபோன்ற போலி விளம்பரங்களால் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நீண்ட கால நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரம் பொய்யானது - தொழில் அமைச்சு

ஜனாதிபதி மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. 

ஜனாதிபதி மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்ந்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது.

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டு சுற்றுலா திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
 
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) அவர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]