All Stories

அம்பாறை மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இன்று (06) உஹன பிரதேச செயலகப் பிரிவில்

மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம், அம்பாறை மாவட்டச் செயலகம் மற்றும் உஹன பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை - 2025 இன்று (06) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை உஹன பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற உள்ளது.

அம்பாறை மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இன்று (06) உஹன பிரதேச செயலகப் பிரிவில்

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்காக, பயணிகளை விழிப்புணர்வூட்டல் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறையை ஒழிப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (05) பெஸ்டியன் சாலை தனியார் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்காக, பயணிகளை விழிப்புணர்வூட்டல் - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.

சோமாலியாவில் இருந்து பெறப்பட்ட கோரிக்கை பிரகாரம் 24 மீற்றர் கொண்ட இந்த பிரமாண்ட மீன்பிடி படகு சர்வதேச தரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். தென் கொரியா, கென்யா, சுவீடன் மற்றும் நார்வே உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு மீன்பிடி படகுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது Danusha Marine.

இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர், கடந்த 3 மாதங்களாக கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்ததாகவும், அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்கள் கடந்த காலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

90 வீதமான பணியாளர்கள் திறமையும் அனுபவமும் கொண்டவர்களாக இருந்த போதிலும் அரசியல் அழுத்தங்களினால் அவர்களின் செயற்திறனை சரியான முறையில் பயன்படுத்த முடியவில்லை என அமைச்சர் வருத்தத்துடன் தெரிவித்தார். எனினும், தற்போது நல்ல தலைமைத்துவம் இருப்பதால், அமைச்சின் ஊழியர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், அரசியல் அழுத்தங்கள் இன்றியும் திறமையாக சேவையாற்ற தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Danusha Marine கம்பனியின் தலைவர் திரு.சுமித்ரா பெர்னாண்டோ போன்ற திறமையான தொழில் முயற்சியாளர்கள் நாட்டுக்கு தேவை என அவர் மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான மீன்பிடி படகுகள் மாத்திரமன்றி பாரிய கப்பல்களையும் இந்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி, இலங்கை சிறந்த மனித வளங்கள் நிறைந்த நாடாக விளங்கும் அதேவேளை, புவிசார் அரசியல் அமைவிடத்தின் அடிப்படையில் இலங்கையானது உலகில் தனித்துவமிக்க நாடாகும் என சுட்டிக்காட்டினார். மேலும், மீன்பிடி படகுகளை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு உண்டு என்பதை இவ்வாறான மீன்பிடி படகுகளின் உற்பத்தி உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும், அடுத்த கட்டமாக இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடி படகுகளை உள்ளூர் மீன்பிடித் தொழிலுக்கு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி வலியுறுத்தினார். மேலும், அடுத்தகட்டமாக உள்ளூர் கப்பல்கள் தயாரிப்பிலும் ஈடுபட வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தனுஷ மரைன் லங்கா நிறுவனத்தின் தலைவர் சுமித்ரா பெர்னாண்டோ, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசாந்த கஹாவேஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடி படகு டிக்கோவிட்டவில் அறிமுகப்படுத்தப்பட்டது

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளன

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு; 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளன

தனியார் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் சி சி டி வி வசதியுடன் மாத்திரமே வழங்கப்படும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்

தனியார் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் அந்த பஸ்களில் சிசிடிவி பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு பொருத்தப்பட்டு இருப்பின் மாத்திரம்தான் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் சி சி டி வி வசதியுடன் மாத்திரமே வழங்கப்படும் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்

நாட்டின் மருந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்காக 18% VAT வரியை நீக்கி நிவாரணம் வழங்கியதற்காக தற்போதைய சுகாதார அமைச்சரையும் அரசாங்கத்தையும் மேற்கத்திய மருந்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் சங்கம் பாராட்டு

 
நாட்டின் மருந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பொதியிடல் பொருட்கள் மீதான 18% VAT வரியை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு எடுக்கப்பட்ட சிறந்த முடிவுக்காக, உள்ளூர் மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் மருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட தற்போதைய அரசாங்கத்திற்கு தனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மேற்கத்திய மருந்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் நளின் கன்னங்கர தெரிவித்தார்.
நாட்டின் மருந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்காக 18% VAT வரியை நீக்கி நிவாரணம் வழங்கியதற்காக தற்போதைய சுகாதார அமைச்சரையும் அரசாங்கத்தையும் மேற்கத்திய மருந்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் சங்கம் பாராட்டு

கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’- பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’ ஒன்றை அமைப்பதற்குத் தயாராகியுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’- பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பிரதிசபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற்றது

ஜனாதிபதி மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மின்சார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மற்றும் மின்சார சபை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

 
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் - ஜனாதிபதி

சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

சரியான நகர முகாமைத்துவத்தின் ஊடாக இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் - ஜனாதிபதி

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் 

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

சுங்கத்தின் செயற்திறனின்மை, மோசடி, ஊழல் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் அதிருப்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

இதற்கு தீர்வாக, திணைக்கள செயல்பாடுகளை விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
திணைக்களத்திற்கான புதிய மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுங்கத்தில் காணப்படும் முறைகேடுகளை அகற்ற கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மனிதவள முகாமைத்துவம், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த வருமான இலக்குகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், இந்த வருட வருமான இலக்கை அடைய சுங்கத் திணைக்களம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்து.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி. நோனிஸ் உட்பட இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]