நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
பேரிடர் கழிவு முகாமைத்துவம் மற்றும் சமூக மறுவாழ்வு வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கைகோர்த்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தலை அறிமுகப்படுத்துகின்றோம் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக மரபுரிமை நகரமான காலி நகரத்தை கலாசார மற்றும் சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அதனை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இதன்கீழ், காலி நகர மத்தியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், தபாலகம், சிறைச்சாலை மற்றும் தாதியர் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
முறையான நகரத் திட்டத்தின் கீழ் காலி நகரை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகரத்தைத் திட்டமிடுவதிலும், காலி கோட்டைக்கு வெளியே அரச நிறுவனங்களை நிறுவுவதிலும், கட்டிடங்கள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைக் நிர்மாணிப்பதிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒரு வீசேட பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய நிர்மாணப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
காலி கோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிராந்தியமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்கள் மிகவும் இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், காலி நகரிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் கொண்டு வருதல், தற்போதுள்ள நுண்கலைப் பாடசாலையை அபிவிருத்தி செய்தல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, பாராளுமன்ற உறுப்பினர்களான நிஷாந்த பெரேரா, டி.கே. ஜயசுந்தர, நிஷாந்த சமரவீர, ஹசாரா லியனகே, திலங்க யூ கமகே ஆகியோரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல்.பி. குமுதுலால், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.என். தினிப்ரிய, தேசிய நீர்வழங்கல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் வி. வாசுதேவன், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ.ஆர். தரங்க, தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்சான், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எஸ்.ஏ.கே. சுபசிங்க, நீர் வழங்கல் சபையின் மேலதிக பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.ஆர்.எஸ். விக்ரமசிங்க, தென் மாகாண பிரதம செயலாளர் சந்திம சி. முஹந்திரம்கே, தென் மாகாண முதலமைச்சர் அலுவலக செயலாளர் கிரிஷாந்த டபிள்யூ. மஹேந்திர, தென் மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் துஷானி டி அல்விஸ், காலி மாவட்ட செயலாளர் கே.யு. சந்திரலால் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையின் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளும் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தியால் இயக்கப்படும் மின்பகுப்பின் மூலம் உற்பத்தியாகின்ற பசுமை ஐதரன், கப்பல்துறை, விமான சேவைகள் மற்றும் உலோகக்கைத்தொழில் காபன் நீக்கப்பட்ட 'எதிர்கால எரிபொருளாக' தற்போது உலகளாவிய ரீதியில் அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதல் நாளில் ஆய்வு செய்யப்பட்ட மொத்தம் 31,196 இடங்களில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
2026 ஜூன் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜூன் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மாண்புமிகு ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள்
இந்தியக் குடியரசின் கௌரவப் பிரதமர்
மாண்புமிகு பிரதமர் அவர்களே,
இந்தியக் குடியரசு வரலாற்றில், தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டு மிக நீண்ட காலம் சேவையாற்றிய பிரதமர் என்ற பெருமையைப் பெற்றமைக்காக, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மைல்கல்லானது, உங்களது பதவிக்காலம் பற்றிய ஒரு அறிக்கை மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் உங்களது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள நம்பிக்கையையும் உறுதியையும் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
இந்தியா போன்ற பரந்த, பன்முகத்தன்மை மற்றும் பரவலான ஜனநாயகக் கட்டமைப்புள்ள ஒரு நாட்டில், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ச்சியாக மக்கள் ஆணையை வெல்ல முடிவது குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும். இது உங்களது தனித்துவமான ஆட்சித்திறன், சாதாரண மக்களின் வாழ்வில் உணரக்கூடிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை மற்றும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் நிறைந்த இரு காலகட்டங்களிலும் பொதுமக்களின் நம்பிக்கையை வென்று அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உங்களது ஆளுமையை மிகச்சிறப்பாக எடுத்துரைக்கிறது.
உங்களது ஆட்சிக்காலத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தினை அடைந்துள்ளது. உட்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் தொடர்புகள், அரச சேவைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால் மில்லியன் கணக்கான இந்தியர்கள் பயனடைந்துள்ளனர். உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளையில், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு குரலாக உருவெடுப்பதிலும் வெற்றியடைந்துள்ளது.
உங்களது தலைமையின் கீழ், இந்தியா உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தனது இலக்குகளை நோக்கிப் பயணித்துள்ளது. பொருளாதார ரீதியாக முன்னேற்றகரமான இந்தியா பற்றிய உங்களது தொலைநோக்குப் பார்வை, இலங்கை உட்பட உங்களது எல்லைகளுக்கு அப்பாலுள்ள பல நாடுகளையும் ஊக்குவிப்பதில் வெற்றியடைந்துள்ளது.
இந்த பரிமாற்றக் காலகட்டத்தில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றக் கிடைத்தமையை இலங்கை பெற்ற ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். உங்களது மூன்று பதவிக்காலங்கள் முழுவதும், பரஸ்பர நம்பிக்கை, பூகோள ரீதியான நெருக்கம், ஆழமான நாகரிகத் தொடர்புகள் மற்றும் மக்களின் செழுமைக்கான எமது பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்களிப்பு ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது. சவாலான காலப்பகுதிகளில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய மாறாத நட்பு, அத்துடன் உங்களது தனிப்பட்ட தலையீடு மற்றும் ஆதரவிற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
இந்தியா பெரும் செழுமையையும் வெற்றியையும் நோக்கி அயராது பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், எமது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உறவின் போக்கை முன்னொருபோதும் இல்லாத அடிப்படையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
பெரும்போகத்திற்கு உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி, உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்
இலங்கையர்களுக்கு ஜப்பானில் சிறந்த தொழில் வாய்ப்பு
புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களின் அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த முறையான அணுகல் கருத்திட்டத்தை அமுல்படுத்தல்
‘Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை


