All Stories

பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகினர்.

பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் மற்றும் செயலாளர் இராஜினாமா

நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை செய்ய முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் அல்லது அதன் சார்பாக இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டபோதும் மற்றும் மின் உற்பத்தியின்போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரணை செய்ய முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியத் துணை ஜனாதிபதி திரு சி. பி. ராதாகிருஷ்ணனின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்

2026 ஆம் ஆண்டில் தரம் 1 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் தரம் 1 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்

சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நீண்ட தூர செயல்பாட்டுக் கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற நான்கு (04) சந்தேக நபர்களுடன் ஒரு உள்நாட்டு பல நாள் மீன்பிடிக் கப்பல் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.