கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கைது செய்வதற்கான உத்தரவு (வரண்ட்) பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது, இதனால் அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவு பிரிவால் வெளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தலைவர் இதனை குறிப்பிட்டார்.
எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படுவதற்கு நாம் இடமளிப்பதும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமயப் பாடங்களை கற்பதற்காகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2025 மார்ச் மாதம் கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் போதனா விஞ்ஞான டிப்ளோமாதாரிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை ஒதுக்கி வைக்க வேண்டி ஏற்படுவதனால் சமயப் பாடங்களில் (தர்மாச்சார்ய) சித்தியடைந்த இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2019 மே 25 ஆம் திகதி அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க இவ்வாட்சேர்ப்புத் தொடர்பாக அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு 2024 செப்டம்பர் 25 ஆம் திகதி ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தெளிவுபடுத்தினார்.
• நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க இடமில்லை.
• பல குற்றக் கும்பல்கள் ஒரே நேரத்தில் செயல்படுவது சதித்திட்டமா என்பது சந்தேகமே
• காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து தற்போதைய அரசாங்கம் நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது
- ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு இடையிலான சந்திப்பொன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]