ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது. - ஜனாதிபதி

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது. - ஜனாதிபதி
விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு விவசாயத் திணைக்களம் அறிவிக்கிறது.
இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்தார்.
தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்னவின் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை ஏற்றுக்கொண்டு தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவிப்பு
🔸 கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்த ஆறு உப குழுக்கள்
2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்கு நாளை (11) நள்ளிரவு 12:00 மணி முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.
செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். மண் இல்லாது போனால் – மண் வளம் குன்றிப்போனால் விளைச்சல் இல்லாதுபோய்விடும். எனவே எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு விவசாயிகள் குறைந்த செலவில், கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
2025 மார்ச் 10 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக குறைந்த பங்களிப்பை வழங்கிய எனினும் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கக்கூடிய வடமாகாணத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும் நோக்கில் வட மாகாணத்தில் இதுவரை காலமும் இடம்பெற்ற அரசாங்க நிறுவனங்களில் சிலவற்றை மீண்டும் செயற்படுத்த முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு இணங்க உத்தேசிக்கப்பட்ட புதிய கைத்தொழில் நகரம் ஒன்றுக்காக அவசியமான திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மற்றும் வினைத்திறனான நடவடிக்கைகளுக்காக அண்மையில் (07) மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும, உட்பட்ட குழுவினருடன் வடக்கிற்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த குழுவினர் வடமாகாணத்தின் காங்கேசந்துறை கைத்தொழில் பூங்கா, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சீமெந்துத் தொழிற்சாலை உட்பட திட்டங்கள் சிலவற்றை மேற்பார்வை செய்தனர்.
புதிய திட்டமாக புதிய உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கும் ஆனையிறவு உப்பளத்தை மேற்பார்வை செய்தல், உத்தேசிக்கப்பட்ட கைத்தொழில் பூங்காவாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ள காங்கேசன்துறை , மாங்குளம் மற்றும் பரந்தன் இரசாயன நிறுவனத்திற்கான முதலீட்டை ஆரம்பித்தலுக்காக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் அதிகாரிகளுடன் அவ்விடத்தைக் கண்காணித்தல் ஆகிவற்றிலும் குழுவினர் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போது காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் முழுமையாக அழிவடைந்துள்ள ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு அண்மையில் (07) புத்துயிரளிக்கக் கூடியதாக இருந்ததுடன் அதன் உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் விபரித்தார்.
இதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்கள் பல இப்பிரதேச மக்களுக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் சகல மக்களும் இலங்கையர்களாக இன மத பேதம் இன்றி நாட்டின் பொருளாதாரத்திற்காக பங்களிக்கக்கூடிய பங்காளியர்களாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் மேலும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் அர்ஜுன ஹேரத், வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டவில நீச்சல் தடாகம் (50 மீட்டர்) மற்றும் விளையாட்டு மைதானத்தை எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவு உப்பளத்தை அண்மையில் திறக்கவுள்ளதால், அதன் செயற்பாடுகளுக்கான மதிப்பீட்டுப் பணிகளில் நேற்று (07) கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இணைந்து கொண்டார்.
தேசிய காலநிலை மத்திய நிலையத்தின் எதிர்வு கூறல் பிரிவினால் வெளியிடப்பட்டது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]