All Stories

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர் 

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்றுமுன்தினம் (29) சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்  சுகத் வசந்த த சில்வா, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் ரசாஞ்சலி பத்திரகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 

இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர் 

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுகான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது.

அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன்.

ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வேகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்

• பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்துதல்

• மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும்

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அரச அலுவலகர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கிலும், கடமைகளை திறம்பட நடாத்தி செல்வதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரச அலுவலகர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் - பிரதமர்

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் - கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் தெரிவிப்பு

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் - பிரதமர்

போக்குவரத்து சிக்கல்களை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்ப்பதற்கான முடிவுகள். - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் 

போக்குவரத்துப் பிரச்சினைகளை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்க்க முடிவுகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போக்குவரத்து சிக்கல்களை கட்டமைப்பு ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் தீர்ப்பதற்கான முடிவுகள். - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் 

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான நிகழ்வு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி மு.ப 9.00 மனி முதல் பி.ப 4.00 மணி வரை மாத்தளை மாவட்ட செயலக வீரபுரன் அப்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாத்தளை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு உறுப்பினர் ஒருவரின் நியமனத்திற்கான விதப்புரையை மேற்கொள்வதற்கு சட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்களிடம் இருந்து பெயர் குறித்த நியமனங்களை அரசியலமைப்புப் பேரவை கோரியுள்ளது.

தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கான உறுப்பினரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் அண்மையில் (24) தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – ஐக்கிய அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான (கலாநிதி) அனில் ஜயந்த தெரிவு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]