All Stories

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்

ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 07 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

இலங்கையின் ஏற்றுமதியாளர் ஒருவர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருதான, ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் விழா, 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் விழா பெப்ரவரி 07 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு தொடர்ச்சியாக  தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் புலம்பெயரும் தொழிலாளர் சமூகத்திற்கு, தரமான பயிற்சியை வழங்குவது குறித்து தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனியார் பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டல்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் ஆலோசனைக்கு இணங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் இன்று (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் 2025.01.25 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும்

கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.
 
இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கதுருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

தெதுறுஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

தெதுறுஓயா ஆற்றுப் படுகை யின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ள அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையை அண்மித்துள்ளது.

மேலும் ஓயாதெதுறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் தற்போது நிமிடத்திற்கு 16000 கன அடி வேகத்தில் தெதுறுஓயாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

இந்நிலை காரணமாக ஆற்றுப் படுகையில் உள்ள வாரியபொல, நிகவரெடிய, மஹவ, கொபெயிகனே, பிங்கிரிய, பள்ளம், சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் றஸ்னாயகபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.

தெதுறுஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கல் ஓயா ஆற்றுப் படுகையின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை காரணமாக, கல் ஓயாவின் நீர்மட்டம் வெள்ள மட்டத்திற்கு அண்மித்துள்ளது.
 
இந்த நிலையில் தாழ் நிலப் பகுதிகளில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அம்பாறை, தமண, எராகம, மடுல்ல, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலமை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

மல்வத்துஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

மல்வத்து ஓயாவின் ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் இன்று மாலை 4.00 மணியளவில் அதிக மழை பெய்துள்ளது. மேலும் அதிக மழை செய்து வருவதுடன் அதற்கு மேலதிகமாக நாச்சதீவு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது நிமிடத்திற்கு 3700 கன அடி வேகத்தில் வான் பாய்கிறது.
மல்வத்துஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இன்று (19) மு.ப.9.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் பிரதான 73 நீர்த்தேக்கங்களில் 54 நீர்த்தேக்கங்களில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ( நீர் முகாமைத்துவம்) எச். எப். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான  நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தன்கல பிரதேசங்களில் கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் 2 ஐ தயார் நிலையில் வைப்பதற்கு கடற்படையினரால் ஜனவரி 15 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]