All Stories

பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு -

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை வெறுமனே சட்டப் புத்தகங்களுக்குள்ளோ அல்லது ஆவணங்களுக்குள்ளோ மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவற்றை இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தமது நிஜ வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய யதார்த்தமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளைச் சட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, அவர்களின் நிஜ வாழ்க்கையிலும் அவற்றை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு -

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடற்படையின் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் கொகைன் போதைப்பொருளை கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிக் படகு நெடுந்தூர கடற்படை நடவடிக்கைப் படைப்பிரிவினரால் கைது

“முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் நோக்கங்களை அடைவதற்காக, கடற்படை, ஒரு முக்கிய பங்காளியாக, தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட வெற்றிகரமான கடற்படை நடவடிக்கையில், போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் ஆறு (06) சந்தேக நபர்களும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைது செய்யப்பட்டன. பல நாள் மீன்பிடி படகு இன்று (08 மார்ச் 2026) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்திய நிபுணர் பரிசோதனையின் போது, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்ளில் சுமார் நூற்று இரண்டு (102) கிலோகிராம் ஹெராயின் மற்றும் தொள்ளாயிரத்து (900) கிராமுக்கு மேல் கொகைன் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோர் போதைப்பொருள் கடத்தலை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.   

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடற்படையின் நடவடிக்கைகளின் போது ஹெராயின் மற்றும் கொகைன் போதைப்பொருளை கொண்டு சென்ற பல நாள் மீன்பிடிக் படகு நெடுந்தூர கடற்படை நடவடிக்கைப் படைப்பிரிவினரால் கைது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் வாழும் எமது சகோதரிகளுக்கும் சிறுமிகளுக்கும், இந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் சர்வதேச மகளிர் தினச் செய்தி

உலகெங்கிலும் உள்ள பெண்களைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

“அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக: உரிமைகள். நீதி. செயல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற இவ்வேளையில், நம் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான பெண்களை ஒரு புதிய கோணத்தில் பார்ப்பதற்கான முயற்சியை நாம் மேற்கொள்வது அவசியமாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரின் சர்வதேச மகளிர் தினச் செய்தி

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியாக பெண்களின் வகிபாகம் தனித்துவமானது. இந்தத் துறைகள் அனைத்திலும் பெரும் பொறுப்பைச் சுமக்கும் பெண்களின் அந்த வகிபாகத்தை பாராட்டி, பெண்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை இந்நாளில் குறிப்பாக நினைவுகூர்ந்தாலும், அதனை ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதை நாம் நம்புகிறோம்.

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 மார்ச் 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 மார்ச் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பெய்யக் கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல்தின மீன்பிடி படகு கடற்படையினரால் கைது

இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டு பல்தின மீன்பிடி படகு ஒன்றுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல்தின மீன்பிடி படகு கடற்படையினரால் கைது