2026 பெப்ரவரி 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 07ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று, அரசாங்கத்திற்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது
கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது
மீள்கட்டியெழுப்பும் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக மாத்திரமே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் - அது ஒருபோதும் அடக்குமுறை கருவியாகப் பயன்படுத்தப்படமாட்டாது.
- ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு
25 மாவட்டங்களிலும் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்கல்வியை மேம்படுத்துதல் தொடர்பாக பிரதமரின் தலைமையிலான குழுவினர் விசேட கலந்துரையாடலில் இன்று (06) பாராளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில்,
இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"வெறுமனே தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு மாத்திரம் நின்றுவிடாது, இளைஞர் சமூகத்தின் மனநல ஆரோக்கியம் மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தி இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
இதன்கீழ், நவீன வசதிகளுடனான விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் சுகாதார வசதிகளை நிறுவுதல்; பொழுதுபோக்கு மற்றும் கலைநயமிக்க அனுபவங்களைப் பெறக்கூடிய வகையிலும் மன அமைதி கிடைக்கக்கூடிய வகையிலும் உட்புற மற்றும் வெளிப்புற வளாகங்களை அழகுபடுத்துதல்; ஏனைய கல்வி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கல்லூரிக்கும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய விடயங்களில் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,
நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துவதற்காக 23 தொழில்நுட்பக் கல்லூரிகளின் அபிவிருத்திப் பணிகளை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டார். இந்த நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்காக முப்படைகளின் மனித வளங்களையும், ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
2026.02.06
பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இலங்கையில் நீதி மற்றும் நியாயம் தொடர்பாக நாட்டு மக்களின் அதிக கவனத்தையும் நம்பிக்கையையும் பெறும் வருடமாக இந்த வருடம் இருக்கும்.- ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு
இலங்கையில் வான் குதிப்பு (Skydiving) செயல்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சில் பிப்ரவரி 05 அன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
இலங்கை கடற்படையினர், காவல்துறையுடன் இணைந்து 2026 பெப்பரவரி 02 ஆம் திகதி வத்தளை பகுதியில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயன்ற சுமார் எழுநூற்று நாற்பத்து நான்காயிரத்து ஐநூறு (744500) மருந்து மாத்திரைகளை (Pregabalin Capsules) ஏற்றிச் சென்ற ஒரு (01) லொரியுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.
2026.02.17 முதல் 2026.02.26 வரை நடாத்தப்படவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள் நடாத்துதை தடைசெய்தல் சம்பந்தமாக பரீட்சை திணைக்களம் அறிக்ைக ஒன்றை வௌியிட்டுள்ளது.
2026 T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரானது 2026.02.07 ஆந் திகதி முதல் 2026.03.08 ஆந் திகதி வரை நடைபெறுவதுடன், இப் போட்டிகள் இலங்கையில் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு மாளிகாவத்தை ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்திலும் கருவாத்தோட்டம் SSC விளையாட்டு மைதானத்திலும் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப் போட்டிகளை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகளவிலான ரசிகர்கள் வருகைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப் போட்டிகள் நடைபெறும் திகதிகளில் பின்வரும் போக்குவரத்து திட்டங்களை அமுல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு திட்டமிட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் ஏற்கனவே குறித்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புக்களும் தீர்மானங்களும், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்துறைகளுக்கு முதல் முறையாக அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு.
- கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் (A-009) மகையாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகள் மற்றும் கெட்டம்பே மேம்பால நிர்மாணப் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]