All Stories

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம் சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையாள அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் பெற்றுள்ள போண்டப் பொருவாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும். அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தததை நாம் சத்திக்க வேண்டியிருந்தது. அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மீண்டும் இயல்பு நிலைக்கு திகும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம். சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழ்வும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன இருப்பிலும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம் நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய லாலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்த போதும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன்.

 

இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்கனின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம் கடந்த நூற்றாண்டில் நவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, வளமான நாடு அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர நினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் 1954 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமான இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாண்டு இருதரப்பினர்களுக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 72 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது.
இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம்

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வுபெற்ற) நேற்று (02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் (Colombo Central Bus Stand) தற்போதைய புனரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம்

தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

தேசிய மாணவ பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் நேற்று (02) பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
தேசிய மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்துவதற்கு அரங்கக் கலை உபகரணங்கள்

பாடசாலைகளில் அழகியற்கலைகள் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரங்கக்கலைகள் உபகரணங்களை விநியோகிப்பதற்கான கருத்திட்டத்தை 1,215 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவின் கீழ் 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பாடசாலைகளில் அழகியற் கலைகளை மேம்படுத்துவதற்கு அரங்கக் கலை உபகரணங்கள்

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 – 2030 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையால் ஏற்புடைய அனைத்துப் பங்காளர்களுடன் கலந்துரையாடி, பொருத்தமான காணிகளை அடையாளங் காணல் மற்றும் முன்னுரிமை வழங்கல், மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வரைபடம் மற்றும் மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்திப் பூங்காக்களை அபிவிருத்தி செய்வதற்கான நேரச் சட்டகம் போன்ற பிரதான மூன்று (03) துறைகளை உள்ளடக்கிய வகையிலும், மற்றும் மிதக்கும் சூரிய மின்கல மின்னுற்பத்திக் கருத்திட்டங்களையும் உட்சேர்த்தும் தயாரிக்கப்பட்டுள்ள 'மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வளங்கள் அபிவிருத்தித் திட்டம் 2025 – 2030 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.