All Stories

E - ஜனத்தொகைத் திட்டத்தின் கீழ் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும், காலி மாவட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது

இதன்படி, காலி கடவத் சதர பிரதேச செயலகம் மற்றும் போபே பொத்தல பிரதேச செயலகப் பகுதிகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (24) மேலதிக மாவட்ட செயலாளர் நிலம் மற்றும் அபிவிருத்தி சுமித் சாந்த தலைமையில் காலி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

E - ஜனத்தொகைத் திட்டத்தின் கீழ் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும், காலி மாவட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று (24) கலந்துரையாடப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து விசேட கலந்துரையாடல்

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

முன்னைய கோபா குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பற்றிய 25 கணக்காய்வு அவதானிப்புக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஏற்க முடியாதவை. சுயாதீனக் குழுவொன்றை அமைத்து மீண்டும் உரிய விசாரணைகளை நடத்தவும் – கோபா குழு அறிவுறுத்தல்

201 முதல் 450 வரையான இயந்திர வலுப் பிரிவின் கீழ் 296 மோட்டார் சைக்கிள்கள் உரிய தொகை அறிவிடப்படாமல் பதிவு செய்யப்பட்டமையால் அரசாங்கத்திற்கு 78.15 மில்லியன் இழப்பு – கோபா குழுவில் தெரியவந்தது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது – கோப் உப குழுவில் தெரியவந்தது 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் உள்ள நிறுவனமான இலங்கை யுத் சேர்விஸ் (தனியார்) நிறுவனம் விநியோகஸ்தராகப் பதிவுசெய்து இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு அதிக விலைக்கான கேள்விப்பத்திரத்தை முன்வைத்துள்ளது

புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நதீகா வட்டலியத்த பதவியேற்பு

புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நதீகா வட்டலியத்த இன்று (24) காலை நாராஹேன்பிட்ட - மெஹேவர பியெஸ கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் பதவியேற்றார்.

கங்கசிறிபுர கனிஷ்ட வித்தியாலயம், கம்பொல புனித ஜோசப் மகளிர் கல்லூரி மற்றும் கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சிறந்த பழைய மாணவியான அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் கௌரவப் பட்டம் பெற்றவர். மேலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தொழில் ஆய்வுகள், அவுஸ்திரேலியாவின் Flinders பல்கலைக்கழகத்தில் மகளிர் ஆய்வுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் South Wales பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

2001 ஆம் ஆண்டு தொழில் அதிகாரியாக அரச சேவையில் இணைந்த நதீகா வட்டலியத்த, 2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார். அவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும், தேசிய தொழில் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாகவும், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவும், பல அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

நதீகா வட்டலியத்த தொழில் திணைக்கள வரலாற்றில் தொழில் ஆணையாளர் நாயகப் பதவிக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது பெண்மணி ஆவார்.

புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நதீகா வட்டலியத்த பதவியேற்பு