குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு சமீபத்தில் நடைபெற்றது.
அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2024 க.பொ.த (உயர்தர) பரீட்சையின் 66 உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை 2025 மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 2025 மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 75 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்கள், இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் L H சுமனவீரவை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு Vital Strategies நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கல்வி கல்லூரியில் முதலாவது மாணவர்களாக இன்று உங்களுக்கு காணப்படும் மற்றும் உங்களின் பெற்றோர்களுக்கு காணப்படும் ஆறுதல் எதிர்காலத்தில் இந்த கல்வி கல்லூரிக்கு வருகை தரும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கும் உரிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கழுவெவ தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நீண்டகால மானியங்களை வழங்குவதற்குப் பதிலாக அவர்களில் பெரும்பாலானவர்களை வலுவூட்டுவதே அமைச்சின் நோக்கம் – கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் கௌரவ அமைச்சர் (கலாநிதி) உபாலி பன்னிலகே அவர்கள்


