நாட்டின் கல்விக் கொள்கை மாற்றத்திற்காக ‘கல்விச் சபை’ ஒன்றை அமைப்பதற்குத் தயாராகியுள்ளதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அதன் தலைவர் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ பிரதியமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி, கௌரவ பிரதிசபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சம்பிரதாய கட்டுமானங்களுக்கு அப்பாலான சரியான நகர திட்டமிடல் முறையின் மூலம் இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சுங்கத்தின் செயற்திறனின்மை, மோசடி, ஊழல் மற்றும் பொதுமக்களிடையே காணப்படும் அதிருப்தி குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது
இதற்கு தீர்வாக, திணைக்கள செயல்பாடுகளை விரைவுபடுத்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
திணைக்களத்திற்கான புதிய மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுங்கத்தில் காணப்படும் முறைகேடுகளை அகற்ற கடுமையான சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மனிதவள முகாமைத்துவம், புதிய ஆட்சேர்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
கடந்த ஆண்டு சுங்கம் அடைந்த வருமான இலக்குகளை ஜனாதிபதி பாராட்டியதுடன், இந்த வருட வருமான இலக்கை அடைய சுங்கத் திணைக்களம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்து.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.பி.எஸ்.சி. நோனிஸ் உட்பட இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
- இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தின் இறுதி கட்டத்தின் நிருமாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஆலோசனை
- பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் நிலையமும் திறப்பு
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகள் உட்பட தற்போதைய செயற்பாடுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இலங்கையின் தேசிய கரிம விவசாயத்திற்கான சட்ட நிலை மற்றும் அதன் முன்மொழியப்பட்ட வேறுபாடுகள் தொடர்பாக தேசிய ஆலோசனை வேலைத்திட்டம் ஒன்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தலைமையில் நேற்று (04) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கு இடையே நேற்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.


