வருமான வரி மற்றும் திறைசேரி வரி மூலம் அரசாங்கத்திற்கு அளித்த பங்களிப்புகளில் 173 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.

வருமான வரி மற்றும் திறைசேரி வரி மூலம் அரசாங்கத்திற்கு அளித்த பங்களிப்புகளில் 173 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடமிருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசார பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையின் தேசிய கொண்டாட்டம் இன்று (ஜனவரி 15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.
நாட்டை புதுப்பிக்கத்தக்க வலுசக்தியால் பலப்படுத்துவதுடன், பிரதேச மக்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் நன்மைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகும்.
- வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி
இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது
- வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு
எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நச்சுப் போதைப் பொருளை இல்லாது ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் "முழு நாடும் ஒன்றாக" தேசிய வேலைத் திட்டத்தின் வடமாகாண நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் எம் பிரதீபன் தெரிவித்தார்.
முழு நாடும் ஒன்றாக என்ற தேசிய வேலைத்திட்டம் நாளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நாளை (16) பிற்பகல் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்தும் குறிப்பிட்ட மாவட்ட செயலாளர், எதிர்கால சிறுவர்களையும் இளைஞர்களையும் ஆரோக்கியமான சமுதாயமாக மீட்டெடுக்கும் வேலைத்திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக வேலை திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இந்த நச்சுப் போதை பொருளை உற்சாக ஆட்சி போதைப்பொருள் பாவனையற்ற மாவட்டமாக உருவாக்குவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு அருகில் வசிக்கும் ரிச்சர்ட் வுட் தம்பதியினர் (Mr and Mrs Richard Wood) 2,000 ஸ்டேர்லிங் பவுண் நன்கொடை வழங்கியுள்ளனர்.
மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சி அலரி மாளிகையில் நடைபெற்றது.
உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால
திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு
தனது பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Jiyoon Chung), ஜனவரி 14 ஆந் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]