All Stories

2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பு பதிவானது

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பு பதிவானது

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலி மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் மதிப்பாய்வு - ஒரு வாரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்பு 

 

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலிகளின் மறுசீரமைப்பு பணிகள் சுற்றாடல் அமைச்சின் பிற நிறுவனங்களின் உடனடி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட து. . அதன்படி, யானை வேலிகளின் மறுசீரமைப்பு பணிகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (10) காலை பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் அமைச்சர்  வைத்தியர் தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலி மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் மதிப்பாய்வு - ஒரு வாரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்பு 

இலங்கைக்கு வடமேற்காக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பான ஆலோசனை:

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால், 

2026 ஜனவரி 11ஆம் திகதி முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் 

2026 ஜனவரி 11ஆம் திகதி முற்பகல் 5.30 மணியில் வெளியிடப்பட்டது.

இலங்கைக்கு வடமேற்காக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பான ஆலோசனை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு


2026 ஜனவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்ற தாழமுக்கமானது தொடர்ந்து வலுவிழந்து வருகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மன்னார் வளைகுடாவில் காணப்படுகின்ற தாழமுக்கமானது தொடர்ந்து வலுவிழந்து வருகின்றது. எனவே, நாட்டின் வானிலையில் இத் தொகுதியின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைகின்றது.

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் -  படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (10)  முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு