டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, கிராமங்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்
- ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
🔸 தேசிய கொள்கைத்திட்டத்திற்கு அமைய கைத்தொழில்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொள்வதில் முறையான பொறிமுறையொன்று தொடர்பில் விரிவான கவனம்
வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதல் விதைத் தேங்காய் உற்பத்தி அலகு இன்று (02) காலை பளை நகரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் - ஜனாதிபதி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Dream Destination திட்டத்தின் முதலாவது புகையிரத நிலையம் நவீனமயப்படுத்தல் ஆரம்பம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் ஆகியன ஒன்றிணைந்து தனியாரின் ஒத்துழைப்புடன் அரச - தனியார் பங்குடமை (public - private partnership) திட்டமாக 100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமன்றி அரசாங்க சேவையில் தலைமைத்துவத்தை வழங்கும் அதிகாரிகளுக்கும் காணப்படுவதாக கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டாம் நாளாக இன்றும் (02) வடமாகாணத்தின் பல அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்து வைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில், "நாடே சுபீட்சம் - ஆக்கும் விருட்சம் - கற்பகத்தரு வளம்" என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெறும்.
2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில்16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கு இணையாக, வடக்கில் முதலாவது விதை தேங்காய் உற்பத்தி அலகு ஜனாதிபதியின் தலைமையில் பளை நகரில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதோடு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு எதிரே உள்ள பகுதியில் தென்னை அபிவிருத்தி சபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைப்பார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளும் இன்று (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பரந்தன்-கரச்சி-முல்லைத்தீவு வீதியில் நந்திக்கடல் களப்பிற்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஊடாக, நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிப்பதோடு, இந்தப் பாலம் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாததால் தற்போது மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அது, 02 வழி புதிய பாலமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, 1.4 பில்லியன் ரூபா பொதுமக்களின் வரிப்பணத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
